அறத்துப்பால், துறவறவியல் அதிகாரம்: கள்ளாமை,
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். குறள் # 286
அளவோடு வாழும் வழியில் வாழாதவர் திருடுவதில்
பேராசை உடையவர் ஆவார். பாமரன் பொருள்
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல் குறள் #
287
திருட்டுஎன்னும் கெட்ட எண்ணம் அளவறிந்து வாழும்
ஆற்றல் உள்ளவரிடம் இருக்காது பாமரன் பொருள்
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. குறள் #
288
அளவறிந்து வாழ்பவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல நிற்கும்
கொள்ளையடிப்போர் உள்ளத்தில் களவு. பாமரன் பொருள்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர் குறள் # 289
அளவற்ற செயல் செய்து அப்போதே கெட்டழிவர் களவில்லா
மற்றசெயல்களை தெளிந்து அறியார். பாமரன் பொருள்
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு. குறள் # 290
களவுசெய்வார்க்கு உயிர்வாழ்வதும் தவறும் நல்லவருக்கு
தேவருலகமும் தவறவே தவறாது, பாமரன் பொருள்
7 கருத்துகள்:
தலைப்பும் அருமை... தொடர வாழ்த்துக்கள்...
அளவறிந்து வாழ்பவரிடம் இருக்காது திருடும் எண்ணம்.
கள்ளம் இல்லாத அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
கள்ளாமை அதிகாரம் பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்... அழகு, பாராட்டுகள்...
நண்பா, தங்கள் தளத்தில் கமெண்ட்டை பார்க்க இயலவில்லை...!
திண்டுக்கல் தனபாலன் said...
''தலைப்பும் அருமை... தொடர வாழ்த்துக்கள்..''.
நன்றி! நன்றி!! நன்றி!!!
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
இராஜராஜேஸ்வரி said...
''அளவறிந்து வாழ்பவரிடம் இருக்காது திருடும் எண்ணம். கள்ளம் இல்லாத அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..''
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
இரவின் புன்னகை said...
''கள்ளாமை அதிகாரம் பற்றி மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்... அழகு, பாராட்டுகள்...நண்பா, தங்கள் தளத்தில் கமெண்ட்டை பார்க்க இயல வில்லை...! ''
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி. comments பகுதி சரிசெய்யப்பட்டுவிட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.