குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல்.
அதிகாரம்: இன்னாசெய்யாமை.
இன்னா எனத்தான்
உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண்
செயல். குறள் # 316
துன்பமானவை
எனத்தான் உணர்ந்தவற்றை பிறருக்குச்
செய்வதைத்
தவிர்க்க வேண்டும். பாமரன் பொருள்.
எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. குறள் # 317
எவ்வளவிலும்,
எப்பொழுதும், எவருக்கும் மனதால்கூட
தீமை
செய்யாதிருப்பது சிறந்தது. பாமரன் பொருள்
தன்னுயிர்க்கு
ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு
இன்னா செயல். குறள் # 318
தனக்கு துன்பமானவை
என்பதை உணர்ந்தவன் என்ன காரணத்தால்
மற்ற உயிர்களுக்கு
அத்துன்பத்தைச் செய்வது. பாமரன் பொருள்
பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே
வரும். குறள் # 319
பிறருக்கு
காலையில் தீமையைச் செய்தால் தமக்கு தீமை
மாலையில் தாமாக
வந்துசேரும். பாமரன் பொருள்
நோயெல்லாம்
நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு
பவர். குறள் # 320
தீமையெல்லாம் தீமைசெய்தவரையே சேரும். (எனவே)பிறர்க்கு தீமைசெய்யார்
துன்பமில்லாது வாழ
விரும்புபவர். பாமரன் பொருள்
2 கருத்துகள்:
இன்றைக்கு மிகவும் தேவையான "அதிகாரம்"...
திண்டுக்கல் தனபாலன் said...
//இன்றைக்கு மிகவும் தேவையான "அதிகாரம்"//
Thank you for your visit to my blog and for posting a valuable comment.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.