சனி, 18 ஜனவரி, 2014

நல்லஇனத்தைவிட சிறந்த துணை இல்லை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை

குறள் 356 முதல் 360 வரை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   குறள் # 456
மனந்தூய்மையானவர்க்கு எஞ்சுவது புகழ்போன்ற நன்மை இனந்தூய்மையானவர்க்கு
நன்றாகாத செயல் ஏதும் இல்லை        பாமரன் பொருள்

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   குறள் # 457
மனநலம் உயிர்களுக்கு மேன்மையாகும் இனநலம்
எல்லாப் புகழையும் தரும்.      பாமரன் பொருள்

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு     
இனநலம் ஏமாப் புடைத்து.  குறள் # 458
மனநலம் நன்றாக அமையப்பெற்றவராயினும் சான்றோருக்கு
இனத்தின் நன்மை பாதுகாப்பாக அமையும்.      பாமரன் பொருள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து  குறள் # 459
மனத்தின் நன்மையால் மறுமை இன்பமுடையதாகும் அதுவும்
இனநலத்தால் மேலும் சிறப்புடையதாகும்        பாமரன் பொருள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்     குறள் # 460
நல்லஇனத்தைவிட சிறந்த துணையுமில்லை.தீய இனத்தைவிட
துன்பம் தரும்பகையும் இல்லை          பாமரன் பொருள்


திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்


பொருட்பால்
அரசியல்
அதிகாரம் - சிற்றினம் சேராமை
குறள் 451 முதல் 455 வரை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்   குறள் # 451
பெரியோர் கீழ்மக்களோடு சேர அஞ்சுவர். சிறியவர்கர்கள்தான்
அத்தகு கீழ்மக்களையே உறவாகக் கருதுவார்கள்.     பாமரன் பொருள்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.   குறள் # 452
இருக்கும் நிலத்தின் தன்மையை நீர் அடைவதைப் போன்றது மக்களின் அறிவும் அவர்சார்ந்த இனத்தின் இயல்பாக ஆகிவிடும்.   பாமரன் பொருள்

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.. குறள் # 453
மனத்தால் இயற்கையறிவு மக்களுக்கு ஏற்படும். சார்ந்தஇனத்தால்
இப்படிப் பட்டவன். எனும் சொல் உண்டாகும்.  .     பாமரன் பொருள்

மனத்துஉளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு,       குறள் # 454
ஒருவரின் இயல்பு அவரது மனதால் உண்டாவதுபோல தெரிந்தாலும்
அவர் சார்ந்த இனத்தால் வெளிப்படுவதே ஆகும்.  .     பாமரன் பொருள்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்..    குறள் # 455
மனத்தின்தூய்மை செய்யும் செயலின்தூய்மை இரண்டும்
சேர்ந்த இனத்தின் தூய்மையைக் கொண்டே ஏற்படும். .   பாமரன் பொருள்


வெள்ளி, 3 ஜனவரி, 2014

நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.


தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். குறள் # 446
தகுதிமிக்க பெரியவர்களுடன் நட்பாகப்பழக வல்லவனுக்கு
பகைவர்கள் செய்யக்கூடிய தீங்கு ஏதுமில்லை.     பாமரன் பொருள்

இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்  குறள் # 447
தவறைச் சுட்டிக்காட்டுபவரை துணையாகக் கொள்பவரை யார்தான்
கெடுக்கும் ஆற்றல் உள்ளவர்.                 பாமரன் பொருள்


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்    குறள் @ 448
தீயவற்றைச்சுட்டிக் காட்ட யாருமில்லா தலைவன்
பகைவர் இல்லாவிடினும் கெடுவான்.             பாமரன் பொருள்


முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை     குறள் # 449
முதலில்லா வணிகருக்கு லாபம்இல்லாதது போல் தாங்கும் தூண்போன்ற
துணையில்லாதவருக்கு நல்ல நிலையும் இல்லை.      பாமரன் பொருள்


பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.      குறள் # 450
பலரோடு பகைகொள்வதைவிட பத்துமடங்கு தீமையானது
நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது.                    பாமரன் பொருள்