பொருட்பால் --
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். குறள் #
721
அவையின் வகைதெரிந்து பேசும்போது பிழையாகப் பேசமாட்டார் சொல்லின்
வகையறிந்த தூய்மை யானவர்கள். பாமரன் பொருள்
கற்றாருள் கற்றார்
எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு
வார். குறள் # 722
கற்றவர்களுள் கற்றவராக
மதிக்கப்படுவர் கற்றவர்கள்முன்
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர் குறள் # 723
போர்க்களத்தில் சாகத்துணிவர் பலர், சிலரே
கற்றவர் அவையில் பேச பயப்படாதவர். பாமரன் பொருள்
கற்றார்முன் கற்ற
செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க
கொளல். குறள் # 724
கற்றவர்முன்
தாம்கற்றவற்றை மனதில்பதியுமாறு சொல்லி தாம்கற்றதைவிட
மிகுதியாகக் கற்றவரிடம்
மேலும் பல கற்கவேண்டும் பாமரன்
பொருள்
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு குறள்
# 725
கற்கும்வழியில் அளவைநூல் அறிந்து கற்கவேண்டும் அவையில் அஞ்சாது
மறுமொழி கொடுப்ப தற்காக. பாமரன் பொருள்
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நூண்ணவை அஞ்சு பவர்க்கு குறள் #
726
வாளுக்கு என்ன சம்பந்தம் அஞ்சாதவீரர் அல்லாதவருக்கு, நூலோடு
என்ன சம்பந்தம்
நுண்ணறிவுடையவரின் அவைக்கு பயப்படுவருக்கு. பாமரன் பொருள்
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல் குறள் # 727
போர்க்களத்திலுள்ள
பேடியின் கையில் உள்ள கூரான வாள் போன்றது அவையில்
பேச அஞ்சுபவன் கற்ற
நூல். பாமரன் பொருள்
பல்லவை கற்றும் பயமிலரே
நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா
தார். குறள் # 728
பலநூல்களைக் கற்றாலும்
பயன் இல்லாதவரே நல் அறிஞரின் அவையில்
கேட்பவர் மனதில்
பதியுமாறு சொல்ல இயலாதவர். பாமரன் பொருள்
கல்லா தவரின் கடையென்ப
கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு
வார். குறள் # 729
கல்லாதவரைவிட கீழானவராகக்
கருதப்படுவர்
நூல்களைக் கற்றறிந்த போதிலும் நல்லறிஞரின்
அவைக்கு அஞ்சுபவர். பாமரன் பொருள்
உளரெனினும் இல்லாரொடு
ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா
தார் குறள். # 730
உயிரோடு இருந்தும் இறந்தவர்க்கு
ஒப்பாவர் அவைக்களத்திற்கு அஞ்சி
கற்றவற்றை
கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல
முடியாதவர். பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.