வியாழன், 20 செப்டம்பர், 2012

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது அமிர்தம் என்றாலும் வேண்டாமே!

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது
அமிர்தம் என்றாலும் விரும்பத்தக்கதல்ல
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று--- குறள் 82

வரும் விருந்தினரை தினமும் உபசரிப்பவன் வாழ்க்கை
எந்நாளும் வீழ்ச்சி அடைவதில்லை
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவத்து பாழ்படுதல் இன்று  ---குறள் 83

உள்ளத்தில் திருமகள் வசிப்பாள் முகமகிழ்வுடன்
நல்விருந்தினரை உபசரிப்பவர் வீட்டில்
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்----குறள் 84

நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ விருந்தினரை
உபசரித்து மீதத்தில் உண்பவன்.
வித்தும்இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்---குறள் 85

செல்லும் விருந்தினரை உபசரித்து வருபவருக்காக காத்திருப்பவர்
தேவர்களுக்கு நல்ல விருந்தினராவார்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு  ----குறள் 86

திங்கள், 10 செப்டம்பர், 2012

அன்போடு வாழவேண்டும்


அன்புடன் அமைந்த வாழ்க்கை என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு-----பாமரன் பொருள்
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு----குறள் 75



எலும்பில்லா புழுவை வெயில் வாட்டுவது போல
அன்பில்லாதவர்களை அறம் வாட்டும்----பாமரன் பொருள்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்------குறள் 77


உள்ளன்பு இல்லாது உயிர்வாழ்வது பாலைவனத்தில்
காய்ந்த மரம்துளிர்ப்பது போன்றது----பாமரன் பொருள்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று-----குறள் 78

உடலுறுப்புகள் எல்லாம் என்னசெய்யும்
உள்ளத்தில் அன்பு இல்லாதவருக்கு------பாமரன் பொருள்
புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில வர்க்கு------குறள் 79


அன்பின் வழி செல்லும் உயிர் அவ்வாறில்லாதவர்க்கு
எலும்புதோல் போர்த்திய உடம்பு-----பாமரன் பொருள்
அன்பின் வழியது உயிர் நிலை அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு-----குறள் 80