வியாழன், 20 செப்டம்பர், 2012

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது அமிர்தம் என்றாலும் வேண்டாமே!

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது
அமிர்தம் என்றாலும் விரும்பத்தக்கதல்ல
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று--- குறள் 82

வரும் விருந்தினரை தினமும் உபசரிப்பவன் வாழ்க்கை
எந்நாளும் வீழ்ச்சி அடைவதில்லை
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவத்து பாழ்படுதல் இன்று  ---குறள் 83

உள்ளத்தில் திருமகள் வசிப்பாள் முகமகிழ்வுடன்
நல்விருந்தினரை உபசரிப்பவர் வீட்டில்
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்----குறள் 84

நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ விருந்தினரை
உபசரித்து மீதத்தில் உண்பவன்.
வித்தும்இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்---குறள் 85

செல்லும் விருந்தினரை உபசரித்து வருபவருக்காக காத்திருப்பவர்
தேவர்களுக்கு நல்ல விருந்தினராவார்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு  ----குறள் 86

16 கருத்துகள்:

சீனு சொன்னது…

நல்ல குறள் பகிர்வு வாழ்த்துக்கள் சார்

Unknown சொன்னது…


சீனு said...
//நல்ல குறள் பகிர்வு வாழ்த்துக்கள் சார்//

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

விருந்தோம்பல் பற்றி நன்றாக சொல்லி திருக்குறளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி. நன்றி.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
//விருந்தோம்பல் பற்றி நன்றாக சொல்லி திருக்குறளை பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி//
உங்கள் வருகைக்கும் ஊக்குவித்தமைக்கு நன்றி

sury siva சொன்னது…


உங்கள் வலைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வள்ளுவனை இன்னும் நினைவில் வைத்திருக்கும்
வலைப்பதிவர் சிலரில் தாங்களும்
ஒருவர்.

வாழ்க !!

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

Unknown சொன்னது…

sury Siva said...

//உங்கள் வலைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

மிக அருமை. கொடையில் சிறந்தது விருந்தோம்பல்தானாமே.

Unknown சொன்னது…

athira said...
''மிக அருமை. கொடையில் சிறந்தது விருந்தோம்பல்தானாமே//

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. தங்கள் தகவலுக்கும் நன்றி.

Unknown சொன்னது…

அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

Unknown சொன்னது…

அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

Unknown சொன்னது…

அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே

Unknown சொன்னது…

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.