பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 411 முதல் 415 வரை
செல்வத்துள் செல்வம்
செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம்
தலை. குறள் # 411
செல்வங்களுள் செல்வம்
கேள்விச் செல்வமே, அச்செல்வம்
செல்வங்கள்
எல்லாவற்றிலும் முதன்மையானது. பாமரன் பொருள்
செவிக்குஉணவு இல்லாத
போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்
படும். குறள் # 412.
செவிக்கு உணவு இல்லாத
பொழுது சிறிது
வயிற்றுக்கும் உணவு
தரப்படும். பாமரன் பொருள்
செவிஉணவின் கேள்வி
உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர்
நிலத்து. குறள் # 413.
செவிஉணவாகிய கேள்வியை
உடையவர்கள் வேள்வி உணவால் நிறைவடையும் தேவர்களுக்கு சமமாவர் உலகில். பாமரன் பொருள்
கற்றிலன் ஆயினும்
கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுஆம்
துணை. குறள் # 414.
நூல்களைக் கற்காதவன்
என்றாலும கேட்கவேண்டும் அது ஒருவருக்கு
தளர்ச்சியுற்ற காலத்தில
ஊன்றுகோல் போல் துணையாகும். பாமரன் பொருள்
இழுக்கல் உடையுழி
ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம்
உடையார்வாய்ச் சொல். குறள் # 415
வழுக்கும் தரையில்
ஊன்றுகோல் போல உதவும்
ஒழுக்கம் உடையவரின்
வாய்ச்சொற்கள். பாமரன் பொருள்
.