ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அவையின் தன்மையையும், நேரத்தையும், நிலையையும் அறிந்து பேசவேண்டும்திருக்குறள் பொருட்பால்    
   
அமைச்சியல்       

அவைபறிதல்
                   
        குறள் 711 முதல் 720 வரை       


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்     குறள் # 711
அவையின் தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர்.   பாமரன் பொருள்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்       குறள் # 712
அவையின் நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின் நடையை அறிந்த நல் அறிஞர்கள். .   பாமரன் பொருள்