வியாழன், 25 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
பொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610
குடியென்னும் குன்றா
விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து
கெடும். குறள் # 601
குடிஎன்னும் அணையாத
விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி
மறையும். பாமரன் பொருள்.
மடியை மடியா ஒழுகல்
குடியைக்
குடியாக வேண்டு
பவர். குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல்
வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த
விரும்புபவர். பாமரன் பொருள்
மடிமடிக் கொண்டொழுகும்
பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும்
முந்து. குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி
வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு
முன்பே அழியும். பாமரன் பொருள்
குடிமடிந்து குற்றம்
பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி
லவர்க்கு. குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து
குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி
செய்யாதவருக்கு. பாமரன் பொருள்
நெடுநீர் மறவி மடிதுயில்
நான்கும்
கெடுநீரார் காமக்
கலன். குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி
சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி
ஏறும் வாகனமாகும். பாமரன் பொருள்
படியுடையார் பற்றமைந்தக்
கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல்
அரிது. குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம்
சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய
முடியாது. பாமரன் பொருள்
சனி, 29 நவம்பர், 2014
நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்
பொருட்பால்
அரசியல் ஊக்கம் உடைமை. குறள் 591 - 600
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. குறள்
591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்
உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும். குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும். பாமரன் பொருள்
ஞாயிறு, 23 நவம்பர், 2014
நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.
பொருட்பால்
அரசியல்
ஒற்றாடல்
குறள் 581 முதல் 590 வரை
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக. பாமரன்
பொருள்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில். குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை. பாமரன் பொருள்.
சனி, 15 நவம்பர், 2014
கண்ணிற்கு நகை கண்ணோட்டம் எனும் பண்பே
பொருட்பால் அரசியல் கண்ணோட்டம் குறள் 571 முதல் 580 வரை
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
குறள் # 571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.
பாமரன் பொருள்
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
குறள் # 572
கண்ணோட்டத்தால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது அது இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு சுமை.
பாமரன் பொருள்
புதன், 12 நவம்பர், 2014
நாட்டு பாதுகாப்பைச் செய்துகொள்ளாது ஆட்சிசெய்பவர் அஞ்சி அழிந்து போவார்.
பொருட்பால் -
அரசியல் -
வெருவந்தசெய்யாமை
குறள் 561 முதல 570 வரை
தக்காங்கு
நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு
ஒறுப்பது வேந்து குறள் # 561
குற்றத்தை
நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு
ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு. பாமரன் பொருள்
கடிதோச்சி
மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை
வேண்டு பவர் குறள் # 562
கடுமையாக
தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
மேன்மை
நீங்காமல் இருக்க விரும்புபவர். பாமரன் பொருள்
செவ்வாய், 2 செப்டம்பர், 2014
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே
+பொருட்பால் * அரசியல்
* கொடுங்கோன்மை *
குறள் 551 முதல்
560 வரை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து
குறள் # 551
கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் அறவழிமீறி
மக்களுக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும் அரசு. பாமரன் பொருள்
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. குறள்
# 552
ஆயுதம் ஏந்தியகள்வன் பொருளைக் கொடு என மிரட்டுவதுபோன்றது
ஆளுபவர் அதிகாரத்துடன் மிகஅதிக வரிகேட்பது. பாமரன் பொருள்
.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். குறள் # 553
ஒவ்வொரு நாளும் நன்மைதீமை ஆராய்ந்து ஆட்சிசெய்யா அரசு
ஒவ்வொரு நாளும் சீர்குலைந்து அழியும். பாமரன் பொருள்
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு குறள் # 554
பொருளையும் மக்களையும் சேர்த்து இழக்கும் நடுநிலை
ஆராயாமல் தவறாக ஆட்சி செய்யும் அரசு. பாமரன் பொருள்
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை குறள்
# 555
துன்பப்பட்டு துன்பம்தாங்காது மக்கள் அழுத கண்ணீர்தான்
அரசின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம். பாமரன் பொருள்
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி குறள் # 556
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே அதுஇல்லையெனில்
புகழ்நிலைக்காமல் சரிந்து போகும். பாமரன் பொருள்
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு குறள் # 557
மழைஇல்லாமை உலகுக்கு துன்பம் தருவதுபோல் அரசின்
அருள்இல்லாமை மக்களுக்குத் துயரம் தரும். பாமரன் பொருள்
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். குறள்
#558
வறுமையைவிட துன்பம்தருவது செல்வமுடைமை தவறாக ஆளும்
ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால். பாமரன் பொருள்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். குறள் # 559
ஆள்பவர் நேர்மைதவறி ஆட்சிசெய்தால் பருவமழை தவறி
மேகம் மழை பெய்யாது போகும். பாமரன் பொருள்
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். குறள் #560
பால்வளம் குறையும் அறவோர் அறநூல் மறப்பர்
ஆட்சியாளர் முறைப்படி காக்காவிட்டால். பாமரன் பொருள்
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
வெற்றியைத் தருவது ஆயுதமல்ல நேர்மைதவறா ஆட்சியே
திங்கள், 26 மே, 2014
மறதி புகழை அழிக்கும்
புதன், 16 ஏப்ரல், 2014
பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கே மேன்மை உண்டு
திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. குறள் # 521
வறியவனான நேரத்திலும் பழையஉறவைப் பாராட்டும்
பண்பு
உறவினர்களிடம் மட்டுமே உண்டு. பாமரன்
பொருள்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும் குறள் # 522
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைத்தால்
வளர்ச்சி குறையாத
மேன்மைகள் பலவும் தரும். பாமரன்
பொருள்.
ஞாயிறு, 23 மார்ச், 2014
செவ்வாய், 18 மார்ச், 2014
உறவில்லாதவர் பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.
ஞாயிறு, 9 மார்ச், 2014
சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.
திங்கள், 24 பிப்ரவரி, 2014
உரிய காலத்தை அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டோ?
வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; வலியறிதல்
குறள் 471 முதல் 480 வரை
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் குறள் # 471
செயலின்வலிமையும் தனதுவலிமையும் பகைவரின்
வலிமையும்இருவரது
துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்க. பாமரன் பொருள்
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்
குறள் # 472.
தம்மால்
முடியும்செயல் அறிந்து அதைச்செய்வதற்கான வழியை சிந்தித்து
முயல்பவருக்கு
முடியாதது ஏதுமில்லை jqபாமரன் பொருள்
உடைத்தம் வலியறியார்
ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார்
பலர். குறள் # 473
தன்னுடைய ஆற்றலை
அறியாமல் ஆர்வத்தினால் தொடங்கி
இடையில் முடிக்க
முடியாது கெட்டவர் பலர். பாமரன் பொருள்
அமைந்தாங் கொழுகான் அளவறியான்
தன்னை
வியந்தான் விரைந்து
கெடும். குறள் # 474
மற்றவர்களோடு
ஒத்துப்போகாமல் தன்வலிமையையும் அறியாமல் தன்னைப்
பெரிதாக எண்ணுபவன்
விரைவில் கெடுவான். பாமரன் பொருள்
பீலிபெய் சாகாடும்
அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப்
பெயின் குறள் # 475
மயில்தோகையேயானாலும் வண்டியின் அச்சு முறியும் அதனை
அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால். பாமரன் பொருள்
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும் குறள்
# 476
மரத்தின் கிளைநுனியில் ஏறியவர் அதையும்தாண்டி செல்லமுயன்றால்
அம்முயற்சி அவர் உயிருக்கு முடிவாகி விடும்
பாமரன் பொருள்
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. குறள் # 477
வருவாயின் அளவையறிந்து தருக, அதுவே பொருளைக்
காத்துக்கொண்டு தரும் வழியாகும். பாமரன் பொருள்
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. குறள் #478
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
செலவு அதிகமாகாமல் இருந்தால். பாமரன் பொருள்
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருளின் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை வளமானதாகத் தோன்றி
இல்லாமல் அழிந்து விடும் பாமரன் பொருள்
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும் குறள் # 480
பொருள் உள்ள அளவை ஆராயாது செய்யும் உதவிகளால்
செல்வத்தின் அளவு விரைவில் குறையும். பாமரன் பொருள்
சனி, 1 பிப்ரவரி, 2014
செய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.
பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; தெரிந்து செயல்வகை
குறள் 461 முதல் 470 வரை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்நு செயல்
குறள் # 461
செலவையும் வரும் வருவாயையும் அதன்வழிவரும்
லாபத்தையும் ஆராய்ந்து செயலைச் செய்க. பாமரன் பொருள்
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்
குறள் # 462
தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் ஆராய்ந்து யோசித்து செய்பவர்களுக்கு
செய்யமுடியாத செயல் ஒன்று இல்லை
பாமரன் பொருள்
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்
குறள் #463
லாபம் கிடைக்குமென எண்ணி முதலைஇழக்கும் செயல்களை
ஆதரிக்கமாட்டார்கள் அறிவுடையோர்.
பாமரன் பொருள்
தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
குறள் # 464
என்னவாகும்எனும் தெளிவில்லா செயலை துவங்கமாட்டார்கள் இழிவான
நிலைக்கு பயப்படு பவர்கள் பாமரன் பொருள்
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு
குறள் # 465
செயலின் வகைகளை ஆராயாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை
வலிமையாக நிலைபெறச் செய்யும் ஒரு வழி. பாமரன் பொருள்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
குறள் #466
செய்யக்கூடாதவை செய்வதால் கெடுவான் செய்யவேண்டியவை
செய்யாததாலும் கெட்டுப் போவான்.
பாமரன் பொருள்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
குறள் # 667
யோசித்து செயலில் இறங்குக துவங்கியபிறகு
யோசிப்போம் என்பது குற்றமாகும்.. பாமரன் பொருள்
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்
குறள் # 468
முறையாக செய்யப்படாது முயற்சித்த காரியம் பலர்முயன்று
காத்த போதிலும் கெட்டுப் போகும்
பாமரன் பொருள்
நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை
குறள் #469
நன்மை செய்வதிலும் தவறு உண்டு அவரவர்களுடைய
பண்பை அறிந்து பொருத்தமாக செய்யாவிட்டால். பாமரன் பொருள்
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
குறள் # 470
உலகுஇகழாதவற்றை யோசித்துச் செய்யவேண்டும். தம்நிலையோடு
பொருந்தாததை ஏற்றுக்கொள்ளாது உலகம்.
பாமரன்
பொருள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)