பொருட்பால் அரசியல் அதிகாரம்; பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 வரை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு குறள் #
531
அளவுக்கதிகமான கோபத்தைவிட
தீமையானது- மிகுந்த
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்பக்கொன் றாங்கு குறள் #
532
மறதி புகழை அழிக்கும்- அறிவை
தொடர்ந்து வரும் வறுமை
கொல்வதுபோல. பாமரன் பொருள்
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. குறள் #
533
மறதிஉள்ளவர்களுக்கு புகழ்உடைமை
இல்லை அது உலகிலுள்ள
எத்துறை அறிஞர்க்கும் முடிவான
கருத்தாகும் பாமரன் பொருள்
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு குறள் #
534
மனதில் பயம் உள்ளவர்களுக்கு
அரணிருந்தும் பயனில்லை அதுபோல
மறதிஉள்ளவர்களுக்கு
நல்நிலையிருந்தும் பயனில்லை. பாமரன் பொருள்
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். குறள் #
535
துன்பங்கள் வரும் முன்பே அறிந்து
காக்க மறந்தவன் அத்துன்பம்
வந்தபோது தன்பிழையை எண்ணி
வருந்துவான். பாமரன் பொருள
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். குறள் #
536
யாரிடமும் எப்போதும் மறவாமை
தவறாமல் பொருந்தி
இருக்குமேயானால் அதற்குஒப்பானது
ஏதுமில்லை. பாமரன்
பொருள்
அரிய என்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். குறள் #
537
அரியவைஎன்று முடியாத செயல் இல்லை
மறவாமையெனும்
கருவிகொண்டு அக்கறையுடன்
செய்தால். பாமரன் பொருள்
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். குறள் #
538
சான்றோர்புகழ்ந்தவற்றை
விரும்பிச் செய்யவேண்டும் செய்யாது
மறந்தவர்களுக்கு ஏழுபிறப்பிலும்
நன்மைஇல்லை. பாமரன் பொருள்
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. குறள் #
539
மறந்துபோய் அழிந்தவர்களை
நினைக்கவேண்டும் தாம்தம்
மகிழ்ச்சியில் கடமையை
மறந்திருக்கும் போது. பாமரன் பொருள்
உள்ளியது எய்தல் எளிதுமண் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். குறள் #
540
நினைத்ததை
நினைத்தபடி அடைதல் எளிதாகும் தான்
நினைத்ததை விடாது நினைத்திருக்க முடியுமெனில். பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.