புதன், 16 ஏப்ரல், 2014

பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கே மேன்மை உண்டு

திருக்குறள்  
பொருட்பால்   
அரசியல் 
அதிகாரம்  சுற்றந்தழால்


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.     குறள் # 521
வறியவனான நேரத்திலும் பழையஉறவைப் பாராட்டும் பண்பு
உறவினர்களிடம் மட்டுமே உண்டு.    பாமரன் பொருள்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்     குறள் # 522
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைத்தால் வளர்ச்சி குறையாத
மேன்மைகள் பலவும் தரும்.  பாமரன் பொருள்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று,    குறள் # 523
உறவினருடன் மனந்திறந்து பழகாதவன் வாழ்க்கை குளம்
கரையில்லாமலே நீர் நிறைந்தது போன்றது..

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.      குறள் # 524
உறவினருடன் சேர்ந்து வாழும் வாழ்க்கை செல்வத்தைப்
பெற்றதால் பெற்ற பலானாகும்.       பாமரன் பொருள்.

கொடுத்தலும் இன்சொல்லும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.        குறள் # 525
கொடுத்தலும் இனியசொல் பேசுதலும் செய்தால் அவன் தொடர்ந்து
உறவினரால் சூழப் படுவான்.         பாமரன் பொருள்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.       குறள் # 526
பெரியகொடையாளியாகவும், கோபமில்லாதவனாகவும் இருப்பவனைப் போல
சுற்றமுடையவர் உலகில் யாரும்இல்லை

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.       குறள் # 527
காகம் தன்இனத்தைக் கூவி அழைத்துஉண்ணும் மேன்மையும்
அந்தஇயல்பு உள்ளவர்களுக்கே. உண்டு.        பாமரன் பொருள்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.         குறள் # 528
தலைவன் பொதுவாகப் பார்க்காமல் அவரவர் சிறப்புக்கேற்ப பார்த்தால்
அதைவிரும்பி உறவாக வாழ்பவர் பலர்          பாமரன் பொருள்.

தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.       குறள் # 529
உறவினராய் இருந்து பிரிந்து சென்றவரின் உறவு பொருந்தாத
காரணம் நீங்கியபின் திரும்பி வரும்.      பாமரன் பொருள்.


உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து  எண்ணிக் கொளல்.    குறள் # 530
பிரிந்துசென்று ஒருகாரணத்தால் திரும்பிவந்தவனை தலைவன்
நன்கு ஆராய்ந்து உறவாகக் கொள்ளவேண்டும்.        பாமரன் பொருள்.

5 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
//அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எதிலும் பகிர்வதே சிறந்தது... வாழ்த்துக்கள் ஐயா...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//எதிலும் பகிர்வதே சிறந்தது... வாழ்த்துக்கள் ஐயா.//
மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்- எதிலும் பகிர்வதே உயர்ந்தது. நன்றி

Unknown சொன்னது…

karthik sekar சொன்னது…
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. வலைத்தளத்தின் தீம்ஸ் பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.