சரியான நேரத்தில் செய்யும் உதவி
ஒருவர் ஒரு உதவி வேண்டும் என்று கேட்கிறார் என்றால் அதை உடனடியாக செய்யவேண்டும் “நாளை செய்கிறேன்” “பிறகு பார்க்கலாம்” என்று தள்ளிப் போடக்கூடாது. சரியான நேரத்தில் அவ்வுதவி கிடைக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு பல துன்பங்கள் நேரலாம். தாமதமாக செய்யப்படும் உதவி பயன் இல்லாமலே கூட போய்விடலாம். எனவே தேவையான நேரத்தில் அவ்வுதவி கிடைக்குமென்றால் மிக மிக பயன் தருவதாக இருக்கும். அதனால்தான் சரியான நேரத்தில் செய்யும் உதவியை உலகத்தைவிட பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்
(தேவயான) நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்
உலகத்தைவிட மிகப் பெரியது.
பாமரன் குறள்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது குறள் 102