வெள்ளி, 25 நவம்பர், 2016
புதன், 23 நவம்பர், 2016
செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர்
வியாழன், 1 செப்டம்பர், 2016
போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்
போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்
பொருட்பால் அரணியல் அரண்
குறள்
எண் 741 முதல்
750 வரை
ஆற்று பவர்க்கும் அரண்பொருள்
அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள் குறள் 741
போர்செய்யச் செல்பவர்க்கும் அரண்
சிறந்தது பயந்து
உள்ளே இருப்பவருக்கும் அதுவே
சிறந்தது பாமரன்
பொருள்
மணிநீரும் மண்ணும் மலையும்
அணிநிழற்
காடும் உடைய தரண் குறள் 742
தெளிந்த நீர் வெட்ட
வெளிநிலம் மலை காடு என
நான்கும் உள்ளதே அரண் பாமரன் பொருள்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
நல்லரசு அமையா நாட்டில் எல்லா வளங்களும் இருந்தும் பயனில்லையே
பொருட்பால்
அரணியல்
நாடு
குறள் # 731 முதல் 740 வரை
தள்ளா விளையுளும் தக்காரும்
தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு குறள் # 731
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லா செல்வம்
உடையவரும் சேர்ந்து வாழ்வதே நாடு. பாமரன்
பொருள்
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு
குறள் # 732
பொருள்வளம் உடையதாய் எல்லோரும் விரும்பத் தக்கதாய்
கேடில்லாததாய்
அதிக விளைச்சலை உடையதே நாடு. பாமரன் பொருள்
பொறைபொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைபொருங்கு நேர்வது நாடு
குறள் # 733
மக்கள் பிறநாடுகளிலிருந்து வந்தால் அப்பாரத்தையும் தாங்கி
தன் அரசிற்கு
தரவேண்டுய வரிகளையும் தரவல்லது நாடாகும். பாமரன்
பொருள்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
குறள் # 734
அதிகபசியும் ஓயாத நோயும் தாக்கி அழிக்கும் பகையும்
சேராமல் நடைபெறுவதே நாடாகும் பாமரன்
பொருள்
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு குறள் # 735
பலமாறுபட்ட குழுக்களும் உடனிருந்தே அழிக்கும் பகையும் அரசனை வருத்துகிற
கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே நாடு பாமரன் பொருள்
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
குறள் # 736
பகைவரால் கெடுதலை அறியாததாய் கெட்ட நேரத்திலும்
வளம்குன்றாததாய்
உள்ள நாடே நாடுகளில் தலைமையானது. பாமரன் பொருள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு குறள் # 737
ஆற்றுநீரும் ஊற்று நீரும் அமைந்த மலையும் ஆறாகவரும்
நீர்வளமும்
வலிமையான அரணும் நாட்டிற்கு உறுப்புகளாகும். பாமரன் பொருள்
பிணியின்மை செல்வம்
விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
குறள் # 738
நோயின்மை செல்வம் நல்விளைச்சல் மகிழ்ச்சி நல்ல காவல்
நாட்டிற்கு அழகு என கூறப்படும் ஐந்து. பாமரன் பொருள்
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளர்ந்தரு நாடு
குறள் 739
நன்னாடு என்பது இயற்கை வளங்கள் உள்ளதே சிறந்த நாடல்ல
தேடி முயன்றால் வளம்தரும் நாடு. பாமரன்
பொருள்
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
குறள் # 740.
எல்லா வளங்களும் அமைந்தாலும் பயனில்லையே
நல்ல அரசு அமையாத நாட்டில். பாமரன் பொருள்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016
நல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்
பொருட்பால் --
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
அமைச்சியல் --
அவையஞ்சாமை
குறள் 721 முதல் 730 வரை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். குறள் #
721
அவையின் வகைதெரிந்து பேசும்போது பிழையாகப் பேசமாட்டார் சொல்லின்
வகையறிந்த தூய்மை யானவர்கள். பாமரன் பொருள்
கற்றாருள் கற்றார்
எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு
வார். குறள் # 722
கற்றவர்களுள் கற்றவராக
மதிக்கப்படுவர் கற்றவர்கள்முன்
தான் கற்றவற்றை
மனதில்பதியுமாறு சொல்ல வல்லவர்.. பாமரன் பொருள்
ஞாயிறு, 24 ஜனவரி, 2016
அவையின் தன்மையையும், நேரத்தையும், நிலையையும் அறிந்து பேசவேண்டும்
திருக்குறள் பொருட்பால்
அமைச்சியல்
அவைபறிதல்
குறள் 711 முதல் 720 வரை
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர் குறள் # 711
அவையின்
தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர். பாமரன்
பொருள்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர் குறள் # 712
அவையின்
நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின்
நடையை அறிந்த நல் அறிஞர்கள். . பாமரன் பொருள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)