புதன், 23 நவம்பர், 2016

செல்வரை எல்லாரும் சிறப்பு செய்வர்

பொருட்பால்
கூழியல்
பொருள் செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.         குறள் 751
மதிக்கத் தகாதவரையும்  மதிக்கும்படி செய்யக்கூடியது
பணத்தைத் தவிர வேறு பொருள் இல்லை       பாமரன் பொருள்


இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு           குறள் 752
பொருள் இல்லாதவரை எல்லாரும் இகழ்வர் செல்வரை
எல்லாரும் சிறப்பு செய்வர்                      பாமரன் பொருள்

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.           குறள் 753
பொருள் என்னும் அணையாவிளக்கு துன்பம் எனும் இருளைப் போக்கும்
நினைத்த இடத்திற்குச் சென்று.           பாமரன் பொருள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.