வியாழன், 1 செப்டம்பர், 2016

போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்


போரிடும் திறன்  இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும் 


பொருட்பால்    அரணியல்    அரண் 

குறள் எண்   741 முதல்  750 வரை

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்      குறள் 741 
போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்தது பயந்து
உள்ளே இருப்பவருக்கும் அதுவே சிறந்தது        பாமரன் பொருள்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்           குறள் 742
தெளிந்த நீர் வெட்ட வெளிநிலம் மலை காடு என
நான்கும் உள்ளதே அரண்           பாமரன் பொருள்


உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.     குறள் எண் 743
ஏறமுடியா உயரம் வசதியான அகலம் உறுதி அழிக்க இயலா அருமை எனும் நான்கும்
அமையப் பெற்றதே நல்ல அரண்.         பாமரன் பொருள்

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.        குறள் எண் 744
காக்கும் இடம் சிறியதாகவும் மற்ற இடம் பெரியதாகவும் பகைவரின்
ஊக்கத்தை அழிப்பதாகவம் உள்ளதே அரண்.     பாமரன் பொருள்

கொள்ளற்கரியதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.       குறள் எண் 745
பகைவரால் கைப்பற்றமுடியாததாய் போதிய உணவுஉள்ளதாய் உள்ளிருப்போர்
நிலைத்திருப்பதற்கு எளிதானதாய் உள்ளது அரண்.    பாமரன் பொருள்

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.      குறள் எண் 746
தேவையான எல்லாப் பொருளும் உடையதாய் தேவையான இடத்து உதவ
வல்லமையான வீர்ரகள் உள்ளது அரண்.      பாமரன் பொருள்.

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.        கறள் எண் 747
முற்றுகையிட்டும் முற்றுகையிடாமலும் வஞ்சகச் செயல் செய்தும்
பகைவரால் வெல்லமுடியாததே அரண்       பாமரன் பொருள்

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.         குறள் எண் 748
முற்றுகையிடுவதில் வல்லவர் முற்றுகையிட்டவரையும் உள்ளிருந்து
வென்றதை விடாமலிருந்து வெல்வது அரண்.         பாமரன் பொருள்

முனைமுகத்து மாறவீலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.          குறள் எண் 749
போர்முனையில் பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும்
போர்த்திறத்தால் பெருமை பெற்றது அரண்      பாமரன் பொருள்

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.        குறள் எண் 750
எவ்வளவு சிறப்புக்கள் உடையதாக இருந்தும் போரிடும் திறன்

இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்  பாமரன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.