ஞாயிறு, 9 மார்ச், 2014

சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.

                                     
                                       திருக்குறள்.
                                   
                                     பொருட்பால்

                              அதிகாரம்; இடனறிதல்

                            குறள் 491 முதல் 500 வரை
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.       குறள் # 491
தொடங்காதீர் எச்செயலையும் பகைவரை இகழாதீர் முழுவதும்
சரியான இடத்தைக் .காணும் முன்னர்.       .    பாமரன் பொருள்  .
..

முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.            குறள் # 492
மாறுபாடு பொருந்திய வலிமையுள்ளவர்க்கும் பாதுகாப்பான இடம்சேர்ந்தால் 
மேன்மைகள் பலவுந் தரும்.           பாமரன் பொருள் 

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்றிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.     குறள் # 493
வலிமையில்லாதவரும் வலிமையுள்ளவராகி வெல்வர் ஏற்ற இடமறிந்து
பகைவரிடமிருந்து தன்னைக் காத்துக்கொண்டு செயல்பட்டால்.பாமரன் பொருள்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.     குறள் # 494
வென்றிட நினைத்தவர் அவ்வெண்ணம் இழப்பர் தக்க இடமறிந்து
போரிடத் துவங்கியவர் வென்றிட முயன்று  செயல்பட்டால்..  பாமரன் பொருள்

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.         குறள் # 495
ஆழமான நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும் அந்த நீரிலிருந்து
வெளியே வந்தால் முதலையை மற்றவை வென்றுவிடும்..  பாமரன் பொருள்

கடலோடா கால்வெல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.    குறள் # 496
பெரிய சக்கரங்களையுடைய பெரிய தேர் கடலில் ஓடாது, கடலில் ஓடும்
கப்பலும் நிலத்தில் ஓடாது.                      பாமரன் பொருள்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.        குறள் 497
அஞ்சாமைதவிர வேறு துணை வேண்டாம் செய்யும் முறையைக் குறைவில்லாது
யோசித்து தக்க இடத்தில் செய்தால்.             பாமரன் பொருள்

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.          குறள் @ 498
சிறுபடை உடையவன் தக்க இடத்தில் சேர்ந்தால் பெரிய படை உடையவனின்  உற்சாகம் அழிந்து விடும்          பாமரன் பொருள்

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.   குறள் # 499
பாதுகாப்பான கோட்டையும் பிற சிறப்புகளும் இல்லாதவரெனினும் எதிரி
வாழும் நிலையான இடத்தில் தாக்குவது கடினம்         பாமரன் பொருள்

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகந்த களிறு.    குறள் # 500
கால்புதையும் சேற்றில் நரிகூட கொல்லும் பாகனுக்கும் அஞ்சா

வேலேந்திய வீரனை தந்தத்தால் தாக்கிய ஆண்யானையை.  பாமரன் பொருள்.  

4 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலமறிதலையும் இடமறிந்து செயல்படும் பாங்கினையும் அருமையாக உரைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை ஐயா...

இரண்டு மகிழ்ச்சி - என்னவென்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
//காலமறிதலையும் இடமறிந்து செயல்படும் பாங்கினையும் அருமையாக உரைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!//
படு பிஸியான பதிவுகளுக்கிடையே வருகை தந்தமைக்கும் கருத்தைப் பதிவிட்டமைக்கும் நன்றி.

j

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
மிகவும் அருமை ஐயா...
இரண்டு மகிழ்ச்சி - என்னவென்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்... நன்றி... வாழ்த்துக்கள்..//

தாங்கள் இப்பதிவிற்கு வந்து வாழ்த்தி ஊக்குவித்தமைக்கு நன்றி ( மகிழ்ச்சி??)

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.