திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் 501 முதல் 510 வரை
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும் குறள் # 501.
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் எனும்
நான்கினையும்
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு குறள் # 502.
நற்குடும்பத்தில் பிறந்து குற்றமற்றவனாக பழிக்கு
அஞ்சி
வெட்கப்படுபவனாக உள்ளவனைத் தேர்ந்தெடுக்கவும். பாமரன்
பொருள்
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. குறள் # 503
அரியநூல்களைக் கற்று குற்றமற்றவராக
உள்ளவரிடமும் ஆராய்ந்துபார்த்தால்
அறியாமை இல்லாமல் இராது. பாமரன் பொருள்
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். குறள் #504
குணத்தை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்த்து
அவற்றுள்.
அதிகமாக உள்ளதைக்கொண்டு அவனை எடைபோடுங்கள். பாமரன்
பொருள்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். குறள் #505
ஒருவரது உயர்குணத்துக்கும் இழிகுணத்துக்கும்
அவரவருடைய
செயல்களே உரை கல். பாமரன் பொருள்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. குறள் # 506.
உறவு அற்றவரை தேர்வுசெய்வதைத் தவிர்ப்பீர் அவர்
எவ்வித
பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார். பாமரன்
பொருள்
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதமை எல்லாந் தரும். குறள் # 507.
அன்பின் காரணமாக அறியவேண்டியவை அறியாதவரைத்
தேர்ந்தெடுப்பது
அறியாமை எல்லாம் தரும். பாமரன் பொருள்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். குறள் # 508.
ஒருவரை ஆராயாமல் தேர்வுசெய்தால் வருங்கால
தலைமுறைக்கும்
நீங்காத துன்பத்தைத் தரும். பாமரன்
பொருள்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். குறள் # 509
தேர்வுசெய்யாதீர் யாரையும் ஆராயாமல்
தேர்ந்தெடுத்தபின்
அவரிடம் ஏற்கத்தக்கவற்றை நம்பவேண்டும். பாமரன்
பொருள்
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் குறள் # 510
ஆராயாமல் தேர்வுசெய்வதும் தேர்வு செய்தவனிடம்
சந்தேகம் கொள்வதும்
நீங்காத துன்பத்தைத் தரும் பாமரன்
பொருள்
6 கருத்துகள்:
அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி...
அருமையான குறள்களும், விளக்கங்களும். பகிர்வுக்கு நன்றி.
திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி..//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
ராஜி சொன்னது…
//அருமையான குறள்களும், விளக்கங்களும். பகிர்வுக்கு நன்றி.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
குணத்தை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்த்து அவற்றுள்.
அதிகமாக உள்ளதைக்கொண்டு அவனை எடைபோடுங்கள்
அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி சொன்னது…
//அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.