சனி, 29 நவம்பர், 2014

நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்
பொருட்பால்   அரசியல்    ஊக்கம் உடைமை.   குறள்   591 -  600

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.         குறள்  591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.        குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும்.          பாமரன் பொருள்

ஞாயிறு, 23 நவம்பர், 2014

நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.


பொருட்பால்

 அரசியல் 

ஒற்றாடல் 

குறள் 581 முதல் 590 வரை
     
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                 குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக.                 பாமரன் பொருள்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.                 குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.           பாமரன் பொருள்.

சனி, 15 நவம்பர், 2014

கண்ணிற்கு நகை கண்ணோட்டம் எனும் பண்பே

பொருட்பால்     அரசியல்     கண்ணோட்டம்      குறள் 571  முதல்  580 வரை

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு      குறள் #  571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.      பாமரன் பொருள்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.          குறள் # 572
கண்ணோட்டத்தால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது அது இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு சுமை.      பாமரன் பொருள்

புதன், 12 நவம்பர், 2014

நாட்டு பாதுகாப்பைச் செய்துகொள்ளாது ஆட்சிசெய்பவர் அஞ்சி அழிந்து போவார்.


பொருட்பால் -

 அரசியல் - 

வெருவந்தசெய்யாமை


குறள் 561 முதல  570 வரைதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து  குறள் # 561
குற்றத்தை நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு.    பாமரன் பொருள்

கடிதோச்சி மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்   குறள் # 562
கடுமையாக தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
மேன்மை நீங்காமல் இருக்க விரும்புபவர்.        பாமரன் பொருள்