ஞாயிறு, 23 நவம்பர், 2014

நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.


பொருட்பால்

 அரசியல் 

ஒற்றாடல் 

குறள் 581 முதல் 590 வரை
     
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                 குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக.                 பாமரன் பொருள்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.                 குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.           பாமரன் பொருள்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.              குறள் # 583
ஒற்றர் மூலம் உளவறிவதனால்கிட்டும் பயனை அறியாத ஆள்வோர்
வெற்றி பெறுவதற்கு வழியே இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.             குறள் # 584
அலுவல் செய்பவர் ஆள்பவரின் உறவினர் பகைவர் என்று
எல்லோரையும் ஆராய்பவரே ஒற்றர்.                பாமரன் பொருள்.

கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.                    குறள் # 585
சந்தேகம்வராத உருவத்துடன் பார்வைக்கு அஞ்சாது துன்புறுத்தினாலும்
ரகசியத்தை வெளியிடாதவனே ஒற்றன்..               பாமரன் பொருள்.

துறந்தார் படிவத்தார் ஆகி இறந்து ஆராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.               குறள் # 586
துறவிவேடம் பூண்டும் புகமுடியாத இடத்தில் புகுந்தும் ஆராய்ந்து
எப்படி துன்புறுத்தினாலும் சோர்வடையாதவனே ஒற்றன்.   பாமரன் பொருள்.

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.                  குறள் # 587
மறைவாக நடப்பவற்றையும் விசாரித்து அறிந்து அறிந்தவற்றை
சந்தேகத்திற்கு இடமில்லாது அறிவதே ஒற்று.        பாமரன் பொருள்.

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றும்ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.                 குறள் # 588
ஒற்றர் அறிந்துதந்த பொருளையும் வேறொரு
ஒற்றரால் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும்.  பாமரன் பொருள்.

ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.                   குறள் # 589
ஒற்றர் அறியாமல் உளவு பார்க்க வேண்டும் மூன்றுஒற்றர்கள் கூறுபவை
ஒன்றாக இருந்தால் உண்மைஎன உணரவேண்டும்.  பாமரன் பொருள்.

சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.                 குறள் # 590      
ஒற்றர்களுக்குச் செய்யும் சிறப்பை பிறர் அறிய செய்யற்க, செய்தால்
மறைவானதை தானே வெளிப்படுத்தியதாகும்.    பாமரன் பொருள்.



6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறப்பான விளக்கம்..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி நண்பரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஒற்றன் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் சுருக்கமான விளக்கம் அருமை...

http://dindiguldhanabalan.blogspot.com/2014/11/Gandhi.html

Avainayagan சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…
""சிறப்பான விளக்கம்..""

உங்கள் வேலைகளுக்கிடையே நேரம் ஒதுக்கி இத்தளத்திற்கு வந்து கருத்தினை அளித்தமைக்கு என் நன்றிகள்.

Avainayagan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
''நன்றி நண்பரே...''

உங்கள் வருகைக்கும் கருத்தினைப் பதிவிட்டமைக்கும் எனது நன்றிகள்

Avainayagan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
''ஒற்றன் என்றால் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் சுருக்கமான விளக்கம் அருமை''

தங்கள் வருகைக்கும், கருத்துப்பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் ...நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.