வெள்ளி, 25 நவம்பர், 2016

தீமையின்றி ஈட்டிய பணம் அறத்தையும்


பொருட்பால்
கூழியல்
பொருள் செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்றிந்து
தீதின்றி வந்த பொருள்.              குறள் 754
அறத்தை தரும் இன்பத்தையும் தரும் சேர்க்கும் திறம் அறிந்து
தீமைஇல்லாமல் ஈட்டிவந்த பணம்.        பாமரன் பொருள்


அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்        குறள   755
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் உயர்வை
தீமையானது என்று ஒதுக்கிவிடுக.        பாமரன் பொருள்

உறுபொருளும் உல்கு பொருளும்தன்  ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.     குறள்  756
வரிப்பணமும்  சுங்கக்கட்டணமும் தன் பகைவர்
கட்டும் கப்பமும் அரசிற்குரிய பணமாகும்.       .  பாமரன் பொருள்

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு     குறள்  757க
அருள் என்கின்ற அன்பு பெற்ற குழந்தை பொருள் என்கின்ற

செவிலித் தாயால் வளரும்               .        பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.