குறள் 758 முதல் 760
குன்றேறி யானைப்போர்
கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான்
வினை. குறள் 758
மலைமீது ஏறி
யானைப்போரைக் காண்பதுபோன்றது தன்கைப் பொருளைக் கொண்டு
ஒருசெயலைச் செய்யத் தொடங்குவது பாமரன் பொருள்
செய்க பொருளைச்
செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில். குறள் 759
சேமியுங்கள் பணத்தை
பகைவரின் செருக்கை அழிக்கும்
பணத்தைவிட கூரிய
ஆயுதம் இல்லை பாமரன் பொருள்.
ஒண்பொருள் காழ்ப்ப
இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. குறள் 760
சிறந்த பொருளை
மிகுதியாக ஈட்டியவருக்கு மற்ற
அறமும்
இன்பமும்ஆகிய இரண்டும்
சேர்ந்து வரும். பாமரன் பொருள்
1 கருத்து:
///பணத்தைவிட கூர்மையான ஆயுதம் இல்லை/// உண்மையாவோ? அப்போ அன்பு பாசம் எல்லாம் பணத்துக்குப் பின்புதானோ?
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.