ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அவையின் தன்மையையும், நேரத்தையும், நிலையையும் அறிந்து பேசவேண்டும்



திருக்குறள் பொருட்பால்    
   
அமைச்சியல்       

அவைபறிதல்
                   
        குறள் 711 முதல் 720 வரை       


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்     குறள் # 711
அவையின் தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர்.   பாமரன் பொருள்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்       குறள் # 712
அவையின் நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின் நடையை அறிந்த நல் அறிஞர்கள். .   பாமரன் பொருள்


 அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்      குறள் # 713
அவையின் தன்மையறியாமல் பேச முற்படுபவர் சொல்லின்
வகையும் தெரியாது பேசும் திறமையும் இல்லாதவர்   பாமரன் பொருள்

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்கதை வண்ணம் கொளல்    குறள் # 714
அறிவிற்சிறந்தவர் முன் அறிவிற்சிறந்வராக நடந்து அறிவில்லாதவர்முன்
தாமும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும்.     பாமரன் பொருள்

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.     குறள் # 715
நல்லவை என்று சொல்லப்பட்டவற்றுள் எல்லாம் நல்லது அறிவுமிக்கவரை
முந்திக் கொண்டு பேசாத அடக்கம்.        பாமரன் பொருள்

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு    குறள் # 716
ஒழுக்கநெறியிலிருந்து தவறியதற்கு ஒப்பாகும் அறிவுத்திறன்
மிக்கவர் முன் சொல்லால் சிறுமைப்படுதல்.   பாமரன் பொருள்

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து    குறள் # 717
பலநூல்களைக் கற்றறிந்தவரின் கல்வி நன்கு விளங்கும்
சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசவல்லவர் முன்.   பாமரன் பொருள்

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று       குறள் # 718
தானே உணர்கின்ற தன்மையுள்ளவர் முன் பேசுதல் வளர்கின்ற பயிருள்ள பாத்தியில் நீர்பாய்ச்சுவது போன்றது.        . .   பாமரன் பொருள்

 புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்         குறள் # 719
அறிவில்லாதோர் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது நல் அறிஞருள்ள அவையில்
மனதில் பதியுமாறு சொல்ல வல்லவர்..      .   பாமரன் பொருள்

அங்கணத்துள் உக்கஅமிழ் தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்      குறள் # 720.
தூய்மையில்லா முற்றத்தில் சிந்திய அமிர்தம் போன்றது தமக்கு இணையற்றவர்

உள்ள அவையில் பேசுவது        .   பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Unknown சொன்னது…

""திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
""அருமை...""
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.