பொருட்பால்
அமைச்சியல்
குறிப்பறிதல்
குறள்
701 முதல் 710 வரை
கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி. குறள் # 701
ஏதும் சொல்லாமலே முகக்குறிப்பால் அறிகிறவன் எப்போதும்
வற்றாக்கடல் சூழ்உலகிற்கு அணிகலன். பாமரன் பொருள்
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். குறள் # 702
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளக்கூடியவனை
தெய்வத்திற்கு சமமாக மதிக்கலாம். பாமரன் பொருள்.
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். குறள் # 703
முகக்குறிப்பைக்
கொண்டு மனக்குறிப்பை உணரக்கூடியவரை செல்வத்துள்
எதைக்கொடுத்தாவது துணையாகக் கொள்ளவேண்டும்
பாமரன் பொருள்.
குறித்தது
கூறாமைக் கொள்வரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. குறள் # 704
நினைத்ததை அவர் சொல்லாமலே அறியக்கூடியவர் மற்றவர் போல
உறுப்பால் ஒத்தவர் அறிவால் வேறுபட்டவர். பாமரன் பொருள்.
குறிப்பிற்
குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் குறள் # 705
முகக்குறிப்பால் உள்ளத்தில் இருப்பதை உணராவிட்டால் உறுப்புகளுள்
கண்களுக்கு என்ன பயன். பாமரன் பொருள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல்
நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் குறள் # 705
அருகிலுள்ள பொருளைக் காட்டுகிற
கண்ணாடி போல நெஞ்சில்
நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது
முகம். பாமரன் பொருள்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். குறள் # 707
முகத்தைவிட அறிவுமிக்கது உண்டோ
விரும்பினாலும்
வெறுத்தாலும் முந்திக்கொண்டு தெரிவித்துவிடுமே பாமரன் பொருள்.
முகம்நோக்கி
நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின் குறள் # 708
உற்ற துணர்வார்ப் பெறின் குறள் # 708
முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் உள்ளத்தில் உள்ளதை
குறிப்பால் உணரக்கூடியவரைப் பெற்றிருந்தால். பாமரன் பொருள்
பகையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். குறள் # 709
பகையையும் நட்பையும் ஒருவரின் கண்ணே சொல்லிவிடும்
பார்வையின்
வேறுபாடுகளை புரிந்து கொள்ளக்கூடியவரைப்
பெற்றிருந்தால். பாமரன் பொருள்
நுண்ணியம்
என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. குறள் # 710
நுட்பமான அறிவுடையவர் மனக்குறிப்பை அளக்குங்கருவி
எதுவென ஆய்ந்து பார்த்தால்
கண்களல்லாமல் வேறு இல்லை. பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.