புதன், 11 நவம்பர், 2015

காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்

                 காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
 அமைச்சியல்                        , பொருட்பால்,                        மன்னரைச் சேர்ந்தொழுதல் 
                                                     , குறள் 691-700
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொ.ழுகு வார்    குறள் # 691
அதிகம் நீங்காதும் அதிகம் நெருங்காதும் தீயில் குளிர்காய்வது போல் இருப்பர்
அரசைச் சார்ந்து வாழ்பவர்.     பாமரன் பொருள்


மன்னர் விழைய விழையாமை மன்னரால்   
மன்னிய ஆக்கந் தரும்.     குறள் # 692
அரசினர் விரும்புபவற்றை தாம் விரும்பாதிருத்தல் அரசால்
நிலைத்த ஆக்கத்தைத் தரும்         பாமரன் பொருள்

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.     குறள் # 693
காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும், தவறு நேர்ந்துவிட்டால்
ஆட்சியாளருக்குத் தெளிவு படுத்துதல் கடினம்.      பாமரன் பொருள்

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.       குறள் # 694
பிறர் காதருகே பேசுவதையும் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்துப்பழகுவது
ஆற்றல்மிக்க பெரியவர்கள்முன் அவசியம்.    பாமரன் பொருள்

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.      குறள் # 695
ஆட்சியாளர் பேசும் ரகசியத்தை கேட்கக்கூடாது அதுபற்றி
அவர்களே சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.                               பாமரன் பொருள்

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.    குறள் # 696
ஆட்சியாளரின் மனநிலை அறிந்து நேரம் பார்த்து வெறுக்காதவற்றையும்
விருப்புமானவற்றையும் விரும்பும்படி சொல்க.       பாமரன் பொருள்

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்      குறள் # 607
ஆட்சியாளர் விரும்புபவற்றைச் சொல்லி எப்போதும் பயனில்லாதவற்றை
கேட்டாலும் சொல்லாமல் விடுக.        பாமரன் பொருள்

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.     குறள் # 698
ஆட்சியாளர் என்னில் இளையவர் எனது உறவினர் என இகழாமல், இருக்கும்
நிலைக்கு ஏற்ப அவருடன் பழகுக.           பாமரன் பொருள்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்      குறள் #  699
ஆட்சியாளரால் ஏற்கப்பட்டவர் என எண்ணி ஏற்கமுடியாதவற்றை செய்யார்   
தெளிந்த அறிவுடையவர்கள்.                          பாமரன் பொருள்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்    குறள் # 700
ஆட்சியாளருக்கு பழக்கம் உள்ளவர் என்றெண்ணி தகாதன செய்கிற
உரிமை கேட்டைத் தரும்.       பாமரன் பொருள்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.