செவ்வாய், 27 அக்டோபர், 2015

தனக்கு அழிவைத் தருவதாயினும் அஞ்சாது பணியாற்றுபவரே நல்ல தூதர்

பொருட்பால்               அமைச்சியல்                 தூது
                         681 முதல் 690 வரை

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு     குறள் # 681
அன்புள்ளவராதல் நல்ல குடிப்பிறப்பு அரசுவிரும்பும்
நற்பண்பு உள்ளவராதல் தூதருக்கான தகுதி     பாமரன் பொருள்

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று               குறள் # 682
அன்பு அறிவு ஆராய்ந்து பேசும் சொல்திறமை தூதருக்கு
தேவையான முக்கிய மூன்று பண்புகள்         பாமரன் பொருள்


நூலாருள் நூல்வல்லவன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு         குறள்  # 683
நூல்அறிந்தவருள் அதிகம்அறிந்தவனாதல் பகைநாட்டிடம்
தன்நாட்டின் வெற்றிக்கான செயலைச் சொல்லும் தூதரின்பண்பு .பாமரன் பொருள்

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு    குறள் # 684
அறிவு நல்ல தோற்றம் ஆராய்ந்த கல்வி எனும் மூன்றும்
நன்கு பொருந்தியவர் தூதராகச் செல்லலாம்          பாமரன் பொருள்

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது       குறள் # 685
பலவற்றைத் தொகுத்து தேவையற்றதை நீக்கி மகிழும்படி சொல்லி
நன்மை உண்டாகச் செய்வதே தூதுபாமரன் பொருள்

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது       குறள் # 686
கற்பன கற்று பகைவருக்கு அஞ்சாது மனதில் பதியச் சொல்லி உரிய நேரத்தில்
தேவையானதை அறிவதும் தூதரின்பண்பு.    பாமரன் பொருள்

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.       குறள் # 687
கடமையை அறிந்து உரிய நேரத்தை உணர்ந்து தக்க இடத்தை
சிந்தித்து சொல்பவனே சிறந்த தூதன்          பாமரன் பொருள்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு      குறள் # 688
தூயஒழுக்கம் நல்லதுணை துணிவு எனும்மூன்றையும் பெற்றிருப்பது
தூது உரைப்வரின் தகுதி           பாமரன் பொருள்

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன் கணவன்.      குறள் # 689
தூதுசெல்லும் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன் தவறான செய்தியை
வாய்தவறியும் சொல்லக் கூடாது.       பாமரன் பொருள்

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.         குறள் # 690
தனக்கு அழிவைத் தருவதாயினும் அஞ்சாது தன்தலைமைக்கு
நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்          பாமரன் பொருள்
2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை ஐயா...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//அருமை... அருமை ஐயா..//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.