ஞாயிறு, 21 ஜூன், 2015

காலந்தாழ்த்தாது செய்யவேண்டியவற்றை தாமதியாமல் செய்க


பொருட்பால்    அமைச்சியல்      வினைசெயல்வகை
குறள்  671 முதல் 680 வரை.

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.    குறள் 671
ஆராய்தலின் முடிவு செய்யும் துணிவுபெறல் அத்துணிவை செயல்படுத்த
காலந்தாழ்த்துதல் தீங்கானது.       பாமரன் பொருள்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.    குறள் 672
மெதுவாகச் செய்யக் கூடியவற்றை தாமதித்துச் செய்யலாம், தாமதிக்கக்காதீர்
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டிய வேலைகளை.  பாமரன் பொருள்


ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்      குறள் # 673
இயலும் இடங்களிலெல்லாம் செய்தல் நன்றே இயலவில்லை எனில்
செய்யும் வழியறிந்து செய்ய வேண்டும்.   பாமரன் பொருள்

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்    குறள் # 674
செயல் பகை என்ற இரண்டிலும் முடிக்காது விட்டமீதத்தை நினைத்தால்
முழுதாக அணையாத நெருப்பின் மீதத்தைப்போல் கெடுக்கும் பாமரன் பொருள்

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.   குறள் # 675
செல்வம் ஏற்றகருவி உரியநேரம் செயல்திறம் இடம் ஆகிய ஐந்தையும்
சந்தேகம் இல்லாது யோசித்துச் செய்க..   பாமரன் பொருள்

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படிபயனும் பார்த்துச் செயல்.    குறள் # 676
செய்யும்வகையும் வரும் இடையூறும் முடிவில் கிடைக்கும்
பெரும்பயனும் ஆராய்ந்து செய்க.  பாமரன் பொருள்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்        குறள் # 677
செயலைச் செய்கிறவன் செய்யவேண்டிய முறை அச்செயலின்
இயல்பை அறிந்தவனின் கருத்தை அறிவதே.  பாமரன் பொருள்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.    குறள் # 678
செய்யும் செயலால் மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு
யானையால் மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றது. பாமரன் பொருள்

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்  குறள் # 679
நண்பருக்கு நல்லவை செய்வதைவிட விரைவாகச் செய்க
பகைவரை நண்பராக்கிக் கொள்வதை   . பாமரன் பொருள்

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வார் பெரியார்ப் பணிந்து.   குறள் # 680
சிறுநாட்டை ஆள்வோர் தம்மவர் நடுங்குதல் கண்டு அஞ்சி வேண்டியது கிடைக்க  
ஏற்பர் வலிமையானவரிடம் பணிந்து.      பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை சிறப்பாக சொல்லியுள்ளார் அய்யன் 679...

Avainayagan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
எத்தனை சிறப்பாக சொல்லியுள்ளார் அய்யன் 67

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.