திருக்குறள் பொருட்பால்
அமைச்சியல்
அவைபறிதல்
குறள் 711 முதல் 720 வரை
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த
தூய்மை யவர் குறள் # 711
அவையின்
தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர். பாமரன்
பொருள்
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர் குறள் # 712
அவையின்
நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின்
நடையை அறிந்த நல் அறிஞர்கள். . பாமரன் பொருள்
அவையறியார்
சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார்
வல்லதூஉம் இல் குறள் # 713
அவையின்
தன்மையறியாமல் பேச முற்படுபவர் சொல்லின்
வகையும்
தெரியாது பேசும் திறமையும் இல்லாதவர் பாமரன்
பொருள்
ஒளியார்முன்
ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்கதை
வண்ணம் கொளல் குறள் # 714
அறிவிற்சிறந்தவர்
முன் அறிவிற்சிறந்வராக நடந்து அறிவில்லாதவர்முன்
தாமும்
அப்படியே நடந்து கொள்ள வேண்டும். பாமரன்
பொருள்
நன்றென்ற
வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து
கிளவாச் செறிவு. குறள் # 715
நல்லவை
என்று சொல்லப்பட்டவற்றுள் எல்லாம் நல்லது அறிவுமிக்கவரை
முந்திக்
கொண்டு பேசாத அடக்கம். பாமரன்
பொருள்
ஆற்றின்
நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார்
முன்னர் இழுக்கு குறள் # 716
ஒழுக்கநெறியிலிருந்து
தவறியதற்கு ஒப்பாகும் அறிவுத்திறன்
மிக்கவர்
முன் சொல்லால் சிறுமைப்படுதல். பாமரன்
பொருள்
கற்றறிந்தார்
கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல்
வல்லார் அகத்து குறள் # 717
பலநூல்களைக்
கற்றறிந்தவரின் கல்வி நன்கு விளங்கும்
சொற்களைத்
தேர்ந்தெடுத்து பேசவல்லவர் முன். பாமரன்
பொருள்
உணர்வ
துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள்
நீர்சொரிந் தற்று குறள் # 718
தானே
உணர்கின்ற தன்மையுள்ளவர் முன் பேசுதல் வளர்கின்ற பயிருள்ள பாத்தியில்
நீர்பாய்ச்சுவது போன்றது. . . பாமரன் பொருள்
புல்லவையுள்
பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச்
சொல்லு வார் குறள் # 719
அறிவில்லாதோர் கூட்டத்தில் மறந்தும் பேசக்கூடாது நல்
அறிஞருள்ள அவையில்
மனதில்
பதியுமாறு சொல்ல வல்லவர்.. . பாமரன் பொருள்
அங்கணத்துள்
உக்கஅமிழ் தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன்
கோட்டி கொளல் குறள் # 720.
தூய்மையில்லா
முற்றத்தில் சிந்திய அமிர்தம் போன்றது தமக்கு இணையற்றவர்
உள்ள
அவையில் பேசுவது . பாமரன் பொருள்
2 கருத்துகள்:
அருமை...
""திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
""அருமை...""
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.