வியாழன், 25 டிசம்பர், 2014

முயற்சி செல்வத்தைப் பெருக்கும்.


பொருட்பால்

அரசியல்

ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)

குறள் 611 முதல் 620


அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.          குறள் # 611
செய்வதற்கு அரிது என்று மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை முயற்சி தரும்.    பாமரன் பொருள்


வினைக்கண் வினைகெட ஓம்பல் வினைக்குறை
தீர்த்தாரின் தீர்த்தன்று உலகு       குறள் # 612
ஒரு செயலை கடினமென செய்யாது விடாதீர்கள் முயலாது குறையாக
விட்டவரை உலகமும் கைவிட்டுவடும்.         பாமரன் பொருள்

தாளாமை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.     குறள் # 613
முயற்சி என்னும் உயர்பண்புள்ளவரிடம் நிலைத்திருக்கும்
பிறருக்கு உதவுதல் எனும் பெருமித உணர்வு.     பாமரன் பொருள்

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.                 குறள் # 614
முயற்சி இல்லாதவனின் பிறருக்குதவும் தன்மை பேடியின் கை
வாளைச் சுழற்றுவது போல பயனில்லாதது.       பாமரன் பொருள்

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.     குறள் # 615
தன்இன்பம் விரும்பாது செயலை முடிக்கவிரும்புபவன் தன்உறவுமற்றும் நட்பின்
துன்பம் துடைத்து தாங்கும் தூண்.            பாமரன் பொருள்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்      குறள் # 616
முயற்சி செல்வத்தைப் பெருக்கும் முயற்சி இல்லாமை
வறுமையுள் தள்ளி விடும்.           பாமரன் பொருள்

மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.      குறள் # 617
சோம்பல் உடையவனிடம் மூதேவி தங்குவாள் சோம்பல் இல்லாதவனின்
முயற்சியில் திருமகள் வாழ்கிறாள்.        பாமரன் பொருள்

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.      குறள் # 618
நற்பயன் தரும் விதியில்லை என்பது யாருக்கும் பழியல்ல அறியவேண்டியவை அறிந்து
முயன்று வேலையைச் செய்யாமல் இருப்பதே பழி.    பாமரன் பொருள்

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.       குறள் # 619
(கடவுள்) விதி(த்த)ப் படி காரியம் நடக்கவில்லை என்றாலும் முயன்றுதன்
உடல் வருந்தக் காரியம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.  பாமரன் பொருள்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.        குறள் # 620
ஊழ்எனும் விதியையும் தோல்வியுறச் செய்வர் சோர்வின்றி

குறைவில்லாது முயற்சி செய்பவர்.   பாமரன் பொருள்

4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே

Unknown சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே

Thank you. Wish you Merry Christ,mas.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கங்கள் அருமை...

Unknown சொன்னது…

விளக்கங்கள் அருமை...
Thanks D. D thanks for the encouragement.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.