பொருட்பால்
அரசியல்
ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)
குறள் 611 முதல் 620
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி
தரும். குறள் # 611
செய்வதற்கு அரிது என்று
மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை
முயற்சி தரும். பாமரன் பொருள்
வினைக்கண் வினைகெட ஓம்பல்
வினைக்குறை
தீர்த்தாரின் தீர்த்தன்று
உலகு குறள் # 612
ஒரு செயலை கடினமென
செய்யாது விடாதீர்கள் முயலாது குறையாக
விட்டவரை உலகமும்
கைவிட்டுவடும். பாமரன் பொருள்
தாளாமை என்னும்
தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ்
செருக்கு. குறள் # 613
முயற்சி என்னும்
உயர்பண்புள்ளவரிடம் நிலைத்திருக்கும்
பிறருக்கு உதவுதல் எனும்
பெருமித உணர்வு. பாமரன் பொருள்
தாளாண்மை
இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக்
கெடும். குறள் # 614
முயற்சி இல்லாதவனின்
பிறருக்குதவும் தன்மை பேடியின் கை
வாளைச் சுழற்றுவது போல
பயனில்லாதது. பாமரன் பொருள்
இன்பம் விழையான்
வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம்
துடைத்தூன்றும் தூண். குறள் # 615
தன்இன்பம் விரும்பாது
செயலை முடிக்கவிரும்புபவன்
தன்உறவுமற்றும் நட்பின்
துன்பம் துடைத்து
தாங்கும் தூண். பாமரன் பொருள்
முயற்சி திருவினை
ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி
விடும் குறள் # 616
முயற்சி செல்வத்தைப்
பெருக்கும் முயற்சி இல்லாமை
வறுமையுள் தள்ளி
விடும். பாமரன் பொருள்
மடியுளான் மாமுகடி என்ப
மடியிலான்
தாளுளாள் தாமரையி
னாள். குறள் # 617
சோம்பல் உடையவனிடம்
மூதேவி தங்குவாள் சோம்பல் இல்லாதவனின்
முயற்சியில் திருமகள்
வாழ்கிறாள். பாமரன் பொருள்
பொறியின்மை
யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை
பழி. குறள் # 618
நற்பயன் தரும் விதியில்லை
என்பது யாருக்கும் பழியல்ல அறியவேண்டியவை அறிந்து
முயன்று வேலையைச்
செய்யாமல் இருப்பதே பழி. பாமரன் பொருள்
தெய்வத்தான்
ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக்
கூலி தரும். குறள் # 619
(கடவுள்) விதி(த்த)ப்
படி காரியம் நடக்கவில்லை என்றாலும் முயன்றுதன்
உடல் வருந்தக்
காரியம் செய்தால் உரிய பலன் கிடைக்கும்.
பாமரன் பொருள்
ஊழையும்
உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று
பவர். குறள் # 620
ஊழ்எனும் விதியையும்
தோல்வியுறச் செய்வர் சோர்வின்றி
குறைவில்லாது முயற்சி
செய்பவர். பாமரன் பொருள்
4 கருத்துகள்:
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே
கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் நண்பரே
Thank you. Wish you Merry Christ,mas.
விளக்கங்கள் அருமை...
விளக்கங்கள் அருமை...
Thanks D. D thanks for the encouragement.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.