செவ்வாய், 9 அக்டோபர், 2012

உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது மகிழ்ச்சியுடன் இனிதே பேசுவது


வீட்டிலிருந்து உபசரித்து வாழ்வதெல்லாம் விருந்தினரை உபசரித்து 
உதவிகளைச் செய்வதற் காகவே        பாமரன் பொருள்
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம்விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.  குறள்- 81


இந்த அளவுதான் என்ற ஒன்று இல்லை விருந்தினரின்
தகுதியின் அளவே உபசரிப்பின் பயன்       பாமரன் பொருள்
இணைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்பயன்     குறள் 87


செல்வமிருந்தும் இல்லை எனும் நிலை விருந்து உபசரித்து போற்றா
மடமை அறிவில்லாதவரிடம் உண்டு         பாமரன் பொருள்
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு      குறள் 89

முகர்ந்து பார்க்க வாடும் அனிச்சமலர் முகம் கோணி
பார்க்க வாடுவர் விருந்தினர்                 பாமரன் பொருள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து       குறள் 90


இனிய சொல்லால் அன்புடன் பேசுபவர் கபடம் இருக்காது
அறப்பொருள் கண்டவர் வாய்ச்சொல்           பாமரன் பொருள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்    91


உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது முகம் மகிழ்ந்து
இனிதே பேசுபவராக ஆதல்              பாமரன் பொருள்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்  குறள் 92

முகம் மலரந்து இனிது நோக்கி மனதாலும்
இனிமையாகப் பேசுவதே அறம்        பாமரன் பொருள்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் குறள் 932 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

முகம் மலரந்து இனிது நோக்கி மனதாலும்
இனிமையாகப் பேசுவதே அறம்

மலர்ச்சியான பகிர்வுகள்..

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...

//மலர்ச்சியான பகிர்வுகள்.//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பு பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.