வெள்ளி, 3 ஜனவரி, 2014

நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.


தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். குறள் # 446
தகுதிமிக்க பெரியவர்களுடன் நட்பாகப்பழக வல்லவனுக்கு
பகைவர்கள் செய்யக்கூடிய தீங்கு ஏதுமில்லை.     பாமரன் பொருள்

இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்  குறள் # 447
தவறைச் சுட்டிக்காட்டுபவரை துணையாகக் கொள்பவரை யார்தான்
கெடுக்கும் ஆற்றல் உள்ளவர்.                 பாமரன் பொருள்


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்    குறள் @ 448
தீயவற்றைச்சுட்டிக் காட்ட யாருமில்லா தலைவன்
பகைவர் இல்லாவிடினும் கெடுவான்.             பாமரன் பொருள்


முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை     குறள் # 449
முதலில்லா வணிகருக்கு லாபம்இல்லாதது போல் தாங்கும் தூண்போன்ற
துணையில்லாதவருக்கு நல்ல நிலையும் இல்லை.      பாமரன் பொருள்


பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.      குறள் # 450
பலரோடு பகைகொள்வதைவிட பத்துமடங்கு தீமையானது
நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது.                    பாமரன் பொருள்

10 கருத்துகள்:

ராஜி சொன்னது…

நல்லவரின் நட்பு நமக்கு நல்லதே செய்யும். அருமையான பகிர்வு. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ஐயா...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

ராஜி said...
//நல்லவரின் நட்பு நமக்கு நல்லதே செய்யும். அருமையான பகிர்வு. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை ஐயா...தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இளமதி சொன்னது…

நல்லவர் நட்பினை நாம் இழந்தால்
அதைவிட வேறில்லை வாழ்வில் துயரத்திற்கு...

புத்தாண்டு முதற் பதிவில் முத்தான விடயம் சொன்னீர்கள் ஐயா!
மிக அருமை!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

இளமதி said...
//நல்லவர் நட்பினை நாம் இழந்தால்
அதைவிட வேறில்லை வாழ்வில் துயரத்திற்கு... புத்தாண்டு முதற் பதிவில் முத்தான விடயம் சொன்னீர்கள் ஐயா!மிக அருமை//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும், புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லவர் நட்பினை நாம் இழந்தால்
அதைவிட வேறில்லை வாழ்வில் துயரத்திற்கு...

புத்தாண்டு முதற் பதிவில் முத்தான விடயம் சொன்னீர்கள். மிக அருமை!

இதை அனைவரும் உணர்ந்தால் மிகவும் நல்லது.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
நல்லவர் நட்பினை நாம் இழந்தால்
அதைவிட வேறில்லை வாழ்வில் துயரத்திற்கு...
புத்தாண்டு முதற் பதிவில் முத்தான விடயம் சொன்னீர்கள். மிக அருமை!
இதை அனைவரும் உணர்ந்தால் மிகவும் நல்லது.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள. Thank you for your feed back and encouragement. Wish you all happy NEWYEAR 2014. Thanks.

கோமதி அரசு சொன்னது…

நல்லவர்கள் நட்பு நாளும் நலம் பயக்கும்.
அருமையான புத்தாண்டு வாழ்த்து.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...//நல்லவர்கள் நட்பு நாளும் நலம் பயக்கும்.
அருமையான புத்தாண்டு வாழ்த்து. உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.