செவ்வாய், 23 ஜூலை, 2013

மற்றவருக்கு சிறிதும் தீங்கு இல்லாததாக சொல்வது வாய்மை

அதிகாரம்: வாய்மை 
                                                                குறள் 291-295
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.    குறள் # 291
வாய்மை என்பது என்னவென்றால் மற்றவருக்கு சிறிதும்
தீங்கு இல்லாததாக சொல்வது.    பாமரன் பொருள்

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.     குறள் # 292
பொய்யும் வாய்மையின் இடத்தைப் பெறும் குற்றமற்ற
நன்மையை விளைவிக்கும் என்றால்,     பாமரன் பொருள்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.    குறள் # 293.
தான்அறிந்த ஒன்றைப்பற்றி பொய்சொல்லக்கூடாது சொன்னால்
தன்மனமே தன்னை வருத்தும்            பாமரன் பொருள் 
 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.       குறள் # 294
மனதால்கூட பொய்சொல்லாமல் வாழ்ந்தால் மக்கள்
மனதில் எல்லாம் இருப்பான்.     பாமரன் பொருள்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.     குறள் # 295
மனமறிய உண்மை பேசுவானானால் அவன் தவத்தோடு
தானமும் செய்பவரைவிட சிறந்தவன்.     பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.