அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்.
(குறள் 251 முதல் 255 வரை)
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் # 251
தன்உடலை வளர்க்க வேறொரு உயிரின்ஊனை உண்பவன்
எப்படி அருளுடையனாக முடியும். பாமரன் பொருள்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. குறள்
# 252.
பொருளைஆளுதல் பாதுகாக்காதவர்க்கு இல்லை, அருளாளர்
ஆகும் வாய்ப்பில்லை புலால் உண்பவர்க்கு.
பாமரன் பொருள்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். குறள் # 253
ஆயுதம் ஏந்தியவர் நெஞ்சுபோல் நன்மையைநினையாது ஒன்றின்
உடலைச் சுவைபட உண்டவர் மனம். பாமரன் பொருள்
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். குறள் #
254.
அருளற்றசெயல் என்னவென்றால் கொல்லாமையை சிதைத்தல்
அறமில்லாதது அப்புலாலைத் தின்பது. பாமரன் பொருள்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. குறள் #
255.
(புலால்)உண்ணாமையால் உள்ளன உயிர்கள்.புலால்உண்ண
வாய்திறவாது சகதிக் குழியும். பாமரன் பொருள்
1 கருத்து:
Dindigul Dhanabalan
நல்ல விளக்கம்...
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. 'பொருளல்லது அவ்வூன்' என மாற்றப்பட்டது நன்றி.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.