அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. குறள் # 241
அருட்செல்வமே செல்வங்களுள் சிறந்தது, பொருட்செல்வம்
இழிந்த மனிதரிடமும் உண்டு. பாமரன் பொருள்.
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை. குறள் # 242
நல்லவழியால் ஆராய்ந்து அருள்உடையவராகுக, பலவழிகளால்
ஆராய்ந்தாலும் அருளே நம்துணை. பாமரன் பொருள்
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். குறள் # 243
அருள்நிறைந்த மனம்உள்ளவர்க்கு இல்லை இருள்சூழ்ந்த
துன்ப உலகுக்குப் போவது. பாமரன் பொருள்
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. குறள் #
244.
நிலைபெற்ற
உயிர்களைக் காத்து அருளாளராக இருப்பவர்க்கு இல்லை தன்உயிர் பற்றிய பயம். பாமரன் பொருள்
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. குறள் #
245.
துன்பம் அருளோடு வாழ்பவர்க்கு இல்லை, காற்று இயக்கும்
வளமிக்க உலகில்வாழ்வோரே சாட்சி. பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.