அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்
குறள் 266 முதல் 270 வரை
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. குறள் #
266
தவம்செய்பவரே தன்கடமையைச் செய்பவர் மற்றவர்களோ
ஆசைவயப்பட்டு வீண்முயற்சி செய்பவரே.
பாமரன் பொருள்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. குறள்
# 267
சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப்போல துன்பம்
வருத்த வருத்த தவம்செய்பவர்க்கு (ஞானம்மிகும்) பாமரன் பொருள்
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். குறள் #
268
தன்உயிர் தான்எனும் எண்ணம் நீங்கப்பெற்றவனை மற்ற
உயிர்களெல்லாம் புகழ்ந்து வணங்கும். பாமரன் பொருள்.
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. குறள்
# 269
யமனிடம் தப்பிப்பதும் கைகூடும் தவம்செய்வதால்
வரும் வலிமை பெற்றவர்க்கு. பாமரன் பொருள்.
இலர்பல ராகிய
காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா
தவர். குறள் # 270
ஆற்றலில்லாதவர்
பலராக இருக்கக் காரணம் தவம்செய்பவர்
சிலர், பலரோ
தவம்செய்யாதவர். பாமரன் பொருள்.
2 கருத்துகள்:
அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் said...
'' அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...''
தங்களின் ஊக்குவிப்புக்கு நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.