திங்கள், 15 ஜூலை, 2013

உயிரைக்கொல்லாதவனைக் கைகூப்பி எல்லா உயிர்களும் வணங்கும்


அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல் 
குறள் எண் 256 முதல் 260 வரை

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.   குறள் # 256
தின்பதற்காக உயிர்களைக் கொல்லாது உலகுஎன்றால் யாரும்
விலைக்காக புலால் தருபவரும் இருக்கமாட்டார்.    பாமரன் பொருள்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்          குறள் # 257
புலால்உண்ணாதிருக்க வேண்டும் அப்புலால் வேறோர்உயிரின்
புண்அது என உணரப்பெற்றால்.         பாமரன் பொருள்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.     குறள் # 258
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவையுடையோர் உண்ணமாட்டார்
ஓர்உயிரிலிருந்து நீங்கிவந்த ஊனை.     பாமரன் பொருள்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.     குறள் # 259.
நெய்ஊற்றி ஆயிரம் யாகம்செய்வதைவிட ஒன்றின்
உயிரைக் கொன்று உண்ணாமை நல்லது.       பாமரன் பொருள்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.     குறள் # 260
உயிரைக்கொல்லாதவனை புலால் உண்ணாதவனைக் கைகூப்பி
எல்லா உயிர்களும் வணங்கும்.      பாமரன் பொருள்.
 


2 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

திருக்குறளும், பொருளும் அறிந்து கொண்டேன்.. நன்றி பகிர்வுக்கு

Avainayagan சொன்னது…

தமிழ்வாசி பிரகாஷ் said...
//திருக்குறளும், பொருளும் அறிந்து கொண்டேன்.. நன்றி பகிர்வுக்கு//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.