திங்கள், 29 ஜூலை, 2013

தீமை செய்தவரை தண்டிக்கும் வழி அவருக்கு நன்மை செய்துவது.குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.
(குறள் 311 முதல் 315 வரை)


சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.    குறள் # 311
சிறப்பைத்தரும் செல்வத்தை பெறக் கூடுமென்றாலும் மற்றவர்க்கு தீங்கு
செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.   பாமரன் பொருள்

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.       குறள் # 312
கோபம்கொண்டு தீமை செய்தாலும் பதிலுக்கு தீமை
செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.     பாமரன் பொருள்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.     குறள் # 313
ஏதும்செய்யாதிருக்க தீங்கு செய்தவர்க்கு நாம் தீமைசெய்தபிறகு
தப்பமுடியா துன்பத்தைத் தரும்.         பாமரன் பொருள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.       குறள் # 314
தீமை செய்தவரை தண்டிக்கும் வழி அவர்வெட்கப்படும் படி
அவருக்கு நன்மை செய்துவிடுவது.       பாமரன் பொருள்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.    குறள் # 315
அறிவினால் ஆகும் பயன்ஏதும் உண்டோ, மற்றஉயிரின் துன்பத்தை

தன்துன்பம்போல எண்ணி காக்காவிடில்.      பாமரன் பொருள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான அதிகாரம்... சிறப்பான தலைப்பு... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமையான அதிகாரம்... சிறப்பான தலைப்பு... வாழ்த்துக்கள்.//

உடனடியாகப் பார்த்து கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.