ஞாயிறு, 7 ஜூலை, 2013

எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்குக

அறத்துப்பால்.             குறள் இயல்: இல்லறவியல்.             அதிகாரம்: புகழ்
              
                     குறள் 236 முதல் 240 வரைதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.     குறள் # 236.
எத்துறையில் ஈடுபட்டாலும் புகழோடு விளங்குக, இயலாதார்
அத்துறையில் ஈடுபடாமையே நல்லது.   பாமரன் பொருள்

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.      குறள் # 237
புகழோடு வாழமுடியாதவர் தம்மையே நோகாமல் தம்மை
இகழ்பவரை நோவது எதற்காக.    பாமரன் பொருள்

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.           குறள் # 238
பழிஎன்பர் உலகத்தார் எல்லாருக்கும், புகழ்என்னும்
நற்பெயர் பெறாவிட்டால்.        பாமரன் பொருள்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.           குறள் # 239
வசையற்ற வளமையானபயன் குறையும்  புகழ்இல்லாத
உடம்பைச் சுமந்த பூமியில்.   பாமரன் பொருள்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.        குறள் # 240
பழிஉண்டாகாமல் வாழ்பவரே உயிர்வாழ்பவர் புகழ்இன்றி
வாழ்பவரோ வாழா தவராகும்.     பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.