புதன், 24 ஜூலை, 2013

பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை

அதிகாரம்: வாய்மை 
                                                                குறள் 296-300
 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.     குறள் # 296
பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை உடல்வருந்தாமலே
எல்லா நன்மையும் தரும்.           பாமரன் பொருள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று       குறள் # 297
பொய்சொல்லாமையை உண்மையாகவே கடைப்பிடித்தால் மற்ற அறங்களைச்
செய்தலும் நல்லதாகி விடும்.               பாமரன் பொருள்.

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை
வாய்மையால் காணப் படும்.           குறள் # 298
உடல்சுத்தம் நீரில்குளிப்பதால் உண்டாகும் மனத்தூய்மை
உண்மை பேசுவதால் அறியப் படும்.        பாமரன் பொருள்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விகக்கு.     குறள் # 299
விளக்குகளெல்லாம் விளக்கல்ல பெருந்தன்மையுள்ளோருக்கு
பொய்யாமை எனும் விளக்கே விளக்கு.    பாமரன் பொருள்.

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.      குறள் # 300
நாம் உண்மையாகக் கண்டபொருள்களுள் ஏதொன்றும் இல்லை
உண்மையைவிட நல்லவை வேறு. 

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Avainayagan சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
"பொய்சொல்லாமை போல புகழ்தருவதில்லை
சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!"

Thank you for your PaaraatukkaL and encouragement.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.