செவ்வாய், 2 ஜூலை, 2013

பகிர்ந்துண்ணும் பழக்க முடையவனை பசி தீண்டுவது இல்லை.

அறத்துப்பால், இல்லறவியல், ஈகை, குறள் 226-230


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.     குறள் # 226
வறியவரின் கடும்பசி போக்குவது(நல்லது), அதுவேஒருவன்
தேடிய செல்வத்தை சேமிக்கும் இடமாகும்.    பாமரன் பொருள்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.     குறள் # 227
பகிர்ந்துண்ணும் பழக்க முடையவனை பசிஎன்னும்
கொடியநோய் தீண்டுவது இல்லை.           பாமரன் பொருள்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.      குறள் # 228.
கொடுத்துமகிழும் இன்பத்தை அறியாரோ, தம்செல்வத்தை
கொடுக்காமல் வைத்து இழக்கும் இரக்கமற்றோர்.  பாமரன் பொருள்.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.    குறள் # 229.
யாசிப்பதைவிட கொடியது, குறைவை நிரப்பவேண்டி
தானே தனித்து உண்பது.      பாமரன் பொருள்.

சாதலின் இன்னாத தில்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயாயாக் கடை.  குறள் # 230.
சாவதைவிடத் துன்பமானது ஏதுமில்லை, அச்சாவும் இனிதே
கொடுக்க முடியாத நிலைவந்தபோது.  பாமரன் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.