புதன், 3 ஜூலை, 2013

உலகத்தில் ஒப்பற்ற உயர்ந்த புகழே அழியாது நிற்பது


அறத்துப்பால்.             குறள் இயல்: இல்லறவியல்.             அதிகாரம்: புகழ்
              
                     குறள் 231 முதல் 235 வரை



ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.      குறள் # 231
ஏழைக்கு கொடுப்பது, அப்புகழுடன் வாழ்வது, அதுஇல்லாது
பயன் வேறில்லை மனிதர்க்கு.         பாமரன் பொருள்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.        குறள் # 232.
(புகழ்ந்து) சொல்வார் சொல்பவை யாவும் யாசிப்பவருக்கு ஒன்று
கொடுத்துதவுபவர் மேல் நிற்கும் புகழே.   பாமரன் பொருள்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.       குறள் # 233
உலகத்தில் ஒப்பற்ற உயர்ந்த புகழில்லாமல்
அழியாது நிற்பது வேறில்லை.     பாமரன் பொருள்

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.        குறள் # 234.
இப்பூமியில் நெடும்புகழ் பெற்றால், அவனையன்றி புலவரைப்
போற்றாது தேவர் உலகம்.         பாமரன் பொருள்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.        குறள் # 235.
ஆக்கம் போல கேடும் உள்ளதுபோல, புகழோடு சாவதும்
அறிஞர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு இல்லை.    பாமரன் பொருள்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.