அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை. (சினங்கொள்ளாமை)
குறள் 301 முதல் 305 வரை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என். குறள் # 301
பலிக்கும் இடத்தில் கோபம் கொள்ளாதவனே
சினங்காப்பான் பலிக்காதஇடத்தில்
கோபத்தை
அடக்கினால் என்ன அடக்காவிட்டால் என்ன. பாமரன் பொருள்
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
குறள் # 302
பலிக்காத இடத்தில் கோபம் தீமையானது, பலிக்குமிடத்திலும்
கோபத்தைவிட தீயது வேறுஇல்லை. பாமரன் பொருள்.
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். குறள் #
303
யாரிடமும் கோபத்தை தவிர்ப்போம். தீமைகள்
விளைவது கோபத்தால் வரும். பாமரன் பொருள்.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. குறள் # 304
முகமகிழ்வும் மனமகிழ்வும் கெடுக்கும் கோபத்தைவிட
பகையானது வேறு உண்டோ. பாமரன் பொருள்.
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். குறள் #
305
தன்னை காக்கவிரும்பினால் கோபத்தை அடக்குக, அடக்காவிட்டால்
தன்னையே அழிக்கும் கோபம். பாமரன் பொருள்.
1 கருத்து:
திண்டுக்கல் தனபாலன் said... '' அருமை... வாழ்த்துக்கள்...''
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. (இந்நன்றியைப் பதிவிட உதவியமைக்கு தனி நன்றி)
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.