வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

கொல்லாமையைக் கடைபிடிப்பவரே உயர்ந்தவர்.

குறள் பால்: அறத்துப்பால். குறள்யல்: துறவறவியல். 
அதிகாரம்: கொல்லாமை.

குறள் 321 முதல் 325 வரை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.     குறள் # 321
அறச்செயல் எதுஎன்றால் ஓருயிரையும் கொல்லாமை. கொல்லுதல்
தீவினைகள் எல்லாவற்றையும் விளைவிக்கும்.     பாமரன் பொருள். 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.    குறள் # 322
பகிர்ந்துகொடுத்து தானும்உண்டு பலரைக் காப்பது அறநூலோர்
திரட்டிய அறங்களுள் முதன்மையானது.      பாமரன் பொருள்

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.     குறள் # 323
இணையில்லாது தனித்தே நல்லது கொல்லாமை, அதற்கு
அடுத்துப் பொய்யாமை நல்லது.          பாமரன் பொருள்

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.        குறள் # 324
நல்லவழி எனப்படுவது எதுஎன்றால் எந்த உயிரையும்
கொல்லாத அறத்தைக் காக்கும் வழியே.       பாமரன் பொருள்

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.     குறள் # 325
வாழ்க்கைநிலைக்கு அஞ்சி துறந்தவர்எல்லாரிலும் கொலைபாவத்திற்கு அஞ்சி
கொல்லாமையைக் கடைபிடிப்பவரே உயர்ந்தவர்.      பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை ஐயா... தொடர வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிக்கும் மறுமொழிக்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.