வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது


குறள் பால்; அறத்துப் பால்   குறள் இயல்; துறவறவியல் 
அதிகாரம்; துறவு    
குறள் வரிசை;346 முதல் 350 வரை

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம்  புகும்.  குறள் # 346
நான் எனது என்னும் கர்வத்தை மனதிலிருந்து போக்கியவன்
தேவர்களுக்கும் மேலான உயர்நிலை அடைவான்.     பாமரன் பொருள்


பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.  குறள் # 347
பற்றிக்கொண்டு விடாது துன்பங்கள், பற்றுக்களை
பற்றிக்கொண்டு பற்று விடாதவர்களுக்கு.     பாமரன் பொருள் 
(பற்றுக்களை பற்றிக்கொண்டு பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது)

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்        குறள் # 348
உயர்ந்த நிலையினர் ஆசைகளை முழுதும் துறந்தவர்கள். மயங்கி
அறியாமை வலையில் அகப்பட்டவர்கள் மற்றவர்கள்.  பாமரன் பொருள்
(ஆசைகளை முழுதும் துறந்தவர் உயர் நிலையினர், மற்றவரோ மயங்கி அறியாமை வலையில் விழுந்தவர்.)

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்     குறள் # 349
பற்றுக்களை விட்டபோதுதான் பிறவித்துன்பம் ஒழியும் இல்லையேல்
பிறப்பு இறப்பு மாறிமாறி வரும் நிலையின்மையே தொடரும். பாமரன் பொருள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு   குறள் # 360 
பற்றிக் கொள்ளவும் பற்றில்லாத கடவுளின் பற்றினை. அந்த பற்றை
பற்றுவதும் பற்று விடுவதற்கே.     பாமரன் பொருள்

4 கருத்துகள்:

ராஜி சொன்னது…

மனிதன் படும் துன்பத்திற்கு காரணத்தையும் அதை போக்கும் வழியையும் அழகா பதிவிட்டிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க!!

Avainayagan சொன்னது…

ராஜி said...
//மனிதன் படும் துன்பத்திற்கு காரணத்தையும் அதை போக்கும் வழியையும் .....//

தங்கள் வருகைக்கும் ஊக்கமளிக்கும் பதிவிற்கும் நன்றிங்க

மில்லியனெயார் ஆகும் அதிரா:) சொன்னது…

திருக்குறள்களுக்கு பெரும்பாலும் விளக்கம் புரிவதில்லை, உங்களின் தெளிவான விளக்கத்தால் நிறைய குறள்கள் புரிந்துகொள்கிறேன்.

ஊசிக்குறிப்பு:
உங்களின் மீன்களுக்கு, நான் தான் உணவு போட்டேனாக்கும் இன்று:).

Avainayagan சொன்னது…

athira said...
//திருக்குறள்களுக்கு பெரும்பாலும் விளக்கம் புரிவதில்லை, உங்களின் தெளிவான விளக்கத்தால் நிறைய குறள்கள் புரிந்துகொள்கிறேன்..//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. மீன்களுக்கு உணவு போட்டதற்கும் தனி நன்றி (அடி்க்கடி வந்து மீன்களை பார்த்துச் செல்லுங்கள்)

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.