குறள் பால்: அறத்துப்பால்.
குறள்
இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.
குறள் எண்கள் 336 முதல் 340 வரை
குறள் எண்கள் 336 முதல் 340 வரை
நெருநல் உளனொருவன்
இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ்
வுலகு. குறள் # 336
நேற்று உயிரோடு
இருந்தவர் இன்று இல்லாது இறந்தார் எனும்
பெருமையை உடையது
இவ்வுலகம். பாமரன் பொருள்
ஒருபொழுதும்
வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல
பல. குறள் # 337
ஒருவேளையும் வாழ்வின் நிலையற்ற தன்மையை உணராதவரே
நினைப்பர்
ஒருகோடியல்ல மிகப்
பல எண்ணங்கள். பாமரன் பொருள்
குடம்பை
தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை
நட்பு. குறள் # 338
முட்டைஓடு தனித்து
கிடக்க குஞ்சு பறந்துபோனது போன்றதே
உடலுக்கும்
உயிருக்கும் உள்ள உறவு. பாமரன் பொருள்
உறங்கு வதுபோலுஞ்
சாக்காடு உறங்கி
விழிப்பது போலும்
பிறப்பு. குறள் # 339
தூங்குவது போன்றது
இறப்பு, தூங்கி
விழிப்பது போன்றது
பிறப்பு. பாமரன் பொருள்
புக்கில்
அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த
உயிர்க்கு. குறள் # 340
தங்கஒரு நிலையானவீடு
அமையவில்லையோ, உடம்பிற்குள்
ஓர்மூலையில்
தங்கியிருந்த உயிருக்கு. பாமரன் பொருள்
2 கருத்துகள்:
குறள்களும், அதன் பொருளும் மிகவும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா. பாராட்டுக்கள்.
தயவுசெய்து, நேரம் இருந்தால், நான் இன்று வெளியிட்டுள்ளதோர் சிறப்புப்பதிவுக்கு வருகை தாருங்கள் ஐயா.
இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறள்களும், அதன் பொருளும் மிகவும் அழகாகக் கொடுத்துள்ளீர்கள், ஐயா. பாராட்டுக்கள்//
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.