குறள் பால்: அறத்துப்பால்.
குறள்
இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.
குறள் எண்கள் 331 முதல் 335 வரை
குறள் எண்கள் 331 முதல் 335 வரை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
குறள் # 331
நிலையில்லாதவற்றை
நிலையானவை என்று உணர்கின்ற
அற்ப அறிவு
இழிவானது. பாமரன் பொருள்
கூத்தாட்டு
அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந்
தற்று. குறள் # 332
நாடகஅரங்கிற்கு
மக்கள் கூடுவது போன்றதே பெருஞ்செல்வம் சேர்வது
அதுபோவதும்
கூட்டம் கலைவது போன்றதே.. பாமரன் பொருள்
அற்கா
இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே
செயல். குறள் # 333
நிலையில்லா
இயல்பினது செல்வம் அத்தகுசெல்வம் கிடைத்தால்
நிலையான அறங்களைச்
செய்க. பாமரன் பொருள்
நாளென ஒன்றுபோற்
காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப்
பெறின். குறள் # 334
நாள்
என்பது ஒருகால அளவுபோல் காண்பித்தாலும் உயிரை
அறுக்கும்
வாள்
அதுஎன உணர்ந்தவர்கள் அறிவர். பாமரன் பொருள்
நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று
செய்யப் படும். குறள் # 335
நாவைஅடக்கி
விக்கல் (சாவு) வருவதற்குமுன் நல்லறங்களை
விரைந்து செய்ய
வேண்டும். பாமரன் பொருள்
4 கருத்துகள்:
அனைத்துமே இதுவரை படித்திராத குறள். தகுந்த விளக்கமுடன் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி!!
ராஜி said...
//அனைத்துமே இதுவரை படித்திராத குறள். தகுந்த விளக்கமுடன் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி!//
தங்களின் வருகைக்கும், தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.
நாடகஅரங்கிற்கு மக்கள் கூடுவது போன்றதே பெருஞ்செல்வம் சேர்வது
கொஞ்சம் கொஞ்சமாக சேரும் ...
அதுபோவதும் கூட்டம் கலைவது போன்றதே..
உடனடியாக வெளியேறிவிடும் ..!
இராஜராஜேஸ்வரி said..//செல்வம் சேர்வது
கொஞ்சம் கொஞ்சமாக சேரும் அதுபோவதும் கூட்டம் ..கலைவது போன்றதே.. உடனடியாக வெளியேறிவிடும் .//.
தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துப் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.