எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. குறள் #
281
இகழப்படாமல் வாழவேண்டுபவன் என்பவன் எதனையும்
திருடநினைக்காமல் தன்மனதைக் காக்கவும்.
பாமரன் பொருள்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். குறள் # 282
மனதால் நீனைப்பதும் தீமையானதே, பிறர்பொருளை
அவரறியாது திருடுவோம் என்பதை. பாமரன் பொருள்
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். குறள் # 283.
திருடுவதால் உண்டாகும் பெருக்கம் அளவுக்கதிகமாக
பெருகுவது போலத் தோன்றி அழியும்.
பாமரன் பொருள்
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வியா விழுமம் தரும். குறள் #
284.
திருடுவதில் ஏற்படும் மிகுந்த ஆசை அதன்விளைவால்
தீராத துன்பத்தைத் தரும். பாமரன் பொருள்
அருள்கருதி
அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்பு பார்ப்பார்கண்
இல். குறள் # 285
அருள்விரும்பி
அன்புடையவராவது, பொருளைத் திருட நினைத்து
ஏமாறும் நிலையை எதிர்பார்ப்பவரிடம் இல்லை. பாமரன் பொருள்
1 கருத்து:
தயவு செய்து இப்பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். சிரமம் இருப்பின் இப்பதிவின் கீழ் உள்ள contact form மூலமாக எனக்குத் தகவல் தாருங்கள்.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.