புதன், 10 ஜூலை, 2013

தெளிவில்லாதான் உண்மைப்பொருள் காண்பதரிது




                                                          அருளுடைமை


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.      குறள் # 246
பொருள்இழந்து கடமைமறந்தவர் என்பர் அருள்இல்லாது
தீமைகளை செய்து வாழ்பவரை.      பாமரன் பொருள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.     குறள் # 247.
கருணையற்றவருக்கு மேலுலகவாழ்வு இல்லை பொருளில்லாதவர்க்கு
இப்பூவுலக இன்பம் இல்லாததுபோல.    பாமரன் பொருள்

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.     குறள்.# 248.
பொருள் இழந்தார் ஒருவேளை வளம்பெறலாம் கருணைஇழந்தார்
இழந்தவர்தான் மீண்டும் பெறமுடியாது.   பாமரன் பொருள்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.   குறள் # 249.
தெளிவில்லாதான் உண்மைப்பொருள் காண்பதரிது. ஆய்ந்தால்
அருளில்லாதான் செய்யும் அறசெயலும்.  பாமரன் பொருள்

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து     குறள்  # 250
பலசாலிமுன் தாம்நிற்கும் நிலையைநினைக்கவும், தன்னைவிட
எளியவரை துன்புறுத்த நினைக்கும்போது.      பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எளிய விளக்கம் அருமை...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறிது வேலைப்பளு என்பதால் தொடர முடியவில்லை... இனி தொடர்கிறேன்... நன்றி...

தொடர வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.