ஞாயிறு, 9 ஜூன், 2013

தண்டித்தவர்க்கு ஒருநாளே இன்பம், பொறுத்தவருக்கு எப்போதும் புகழ்.


(தீங்கு செய்தவரை)
தண்டித்தவர்க்கு ஒருநாளே இன்பம், பொறுத்தவருக்கோ
வாழ்நாள் முழுதும் புகழ்.     பாமரன் பொருள்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.     குறள் 156

தகுயில்லாதவற்றை பிறர் செய்தாலும், அவர் வருந்துவாரேஎன
அறமல்லாதவற்றை செய்யாமை நல்லது. பாமரன் பொருள்
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று     குறள் 157

ஆணவத்தால் அநீதி செய்தவரை நாம் நமது
பொறுமையால் வென்று விடுவோம்.  பாமரன் பொருள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்றுவிடல்.     குறள் 158

துறவிபோல் தூய்மையானவர், வரம்புகடந்து நடப்பவரின்
தீயசொல்லைப் பொறுத்துக் கொள்பவர்.    பாமரன் பொருள்.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   குறள் 159

உண்ணாவிரதம் இருப்பவர் பெரியவர்(ஆவார்), பிறர்சொல்லும்
கடுஞ்சொற்களைப் பொறுப்பவருக்குப் பிறகே.  பாமரன் பொருள்,
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   குறள் 160

4 கருத்துகள்:

நம்பள்கி சொன்னது…

// ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். குறள் 156//

ஹி! ஹி!!

Avainayagan சொன்னது…

நம்பள்கி said...
// ஒறுத்தார்க்கு ஒருநாளை......//

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தாந்தம் - தாம்தம் (158)

தொடர வாழ்த்துக்கள்...

Avainayagan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
''தாந்தம் - தாம்தம் (158)
தொடர வாழ்த்துக்கள்..''

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. தாம்தம் என திருத்தப்பட்டது, நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.