பகைபாவம், பயம்,
பழிஎன்ற நான்கும்
நீங்காது
பிறன்மனைவியை நாடுபவனைவிட்டு. பாமரன் பொருள்
பகைபாவம் அச்சம்
பழியென நான்கும்
இகவாவாம்
இல்லிறப்பான் கண். குறள் -146
அறவழியில்
இல்வாழ்பவன் என்பவன் பிறன்மனைவியின்
பெண்மையை
விரும்பாது வாழ்பவனே. பாமரன் பொருள்
அறனியலான்
இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா
தவன். குறள் 147
பிறர்மனைவியைப்
பார்க்காத பெருங்குணம் சான்றோர்க்கு
அறமும் நல்லொழுக்கமும்
ஆகும். பாமரன் பொருள்.
பிறன்மனை நோக்காத
பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற
வொழுக்கு. குறள் 148
நன்மைகளுக்
குரியவர்யாரெனில் நீர்நிறைந்த உலகில்
பிறன்மனைவி தோள்
சேராதவரே. பாமரன் பொருள்.
நலக்குரியார்
யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள்
தோள்தோயா தார். குறள் 149
அறம்செய்யாமல்
தீமையே செய்தாலும் பிறர்க்குரிய
மனைவியை
விரும்பாமை நல்லது. பாமரன் பொருள்.
அறன்வரையான் அல்ல
செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை
நன்று. குறள் 150.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.